கர்ப்பிணிகளுக்கு அன்னாசிப்பழம் நல்லதா? கெட்டதா?

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது உண்ணும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சிறு தவறு ஏற்பட்டாலும், வயிற்றில் வளரும் குழந்தைக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். அவ்வாறு கர்ப்பிணிகள் உண்ணும் உணவில் சில நல்ல உணவுகள் மற்றும் சில கெட்ட உணவுகளும் உள்ளன. அதிலும் கர்ப்பமாக ஒரு பெண் இருந்தால், அவர்கள் வீட்டில் இருப்போர் பல ஆலோசனைகளைச் சொல்வார்கள். உதாரணமாக, கர்ப்பமாக இருக்கும் போது நட்ஸ் மற்றும் சிறு உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும் என்று சொல்வது. is pineapple good or bad pregnancy அதுமட்டுமின்றி இந்த நேரத்தில் உண்ணும் உணவுகளில் உள்ள நல்லது மற்றும் கெட்டது பற்றியும் அதிகம் சொல்வார்கள். உதாரணமாக, கர்ப்பத்தின் போது பப்பாளியை சாப்பிடக் கூடாது. அவ்வாறு சாப்பிட்டால், கருச்சிதைவு ஏற்படும் என்றெல்லாம் சொல்வார்கள். எப்படி பப்பாளியை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், வயிற்றில் உள்ள சிசுவிற்கு பாதிப்பு ஏற்படுமோ, அதேப்போல் அன்னாசிப் பழத்தை சாப்பிட்டாலும், சிலர் பாதிப்பு ஏற்படும் என்று சொல்வார்கள். சரி, இப்போது அன்னாசியை சாப்பிடுவது நல்லதா கெட்டதா, இவற்றில் எது உண்மை என்று பார்ப்போமா!!! குறை பிரசவம்: கர்ப்பிணிகள் அனைவரும் சாப்பிடக்கூடாத பழங்களில், அன்னாசியும் ஒன்று. ஏனெனில் அவற்றை அதிக அளவில் சாப்பிட்டால், அதில் உள்ள புரோமிலியன் (Bromelian) கருப்பையை பலவீனமடையச் செய்துவிடும். அதுமட்டுமின்றி கருப்பை சுவர்களில் சுருக்கத்தை ஏற்படுத்தும். மேலும் இந்த பழத்தை அதிக அளவில் சாப்பிட்டால், வயிற்றுப்போக்கு ஏற்படும். நிறைய பெண்களுக்கு இதனை சாப்பிட்டதால், குறைப் பிரசவம் ஏற்பட்டுள்ளது. எனவே அதனை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. கருச்சிதைவு: அன்னாசிப் பழத்தை கர்ப்பமாக இருக்கும் போது சாப்பிட்டால், கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில் இதில் உள்ள புரோமிலியன் (Bromelian) என்னும் நொதி, பப்பாளியில் உள்ள பப்பைன் (Papain) நொதிக்கு சமமானது. புரோமிலியன் கருப்பையின் சுவற்றை மிகவும் மென்மையாக்கிவிடுவதால், கருவை சுமக்க முடியாத நிலையை உண்டாக்கி, சிதைவை ஏற்படுத்துகிறது. அதிலும் அன்னாசியில் பச்சை மற்றும் கனியாமல் கெட்டியாக இருக்கும் பழத்தை சாப்பிடுவது மிகுந்த கெடுதலை ஏற்படுத்தும். ஆகவே இதனை ஒரு 10 மாதம் சாப்பிடாமல் கட்டுப்பாட்டுடன் இருப்பது மிகவும் நல்லது. மற்ற பிரச்சனைகள்: பொதுவாகவே அளவுக்கு அதிகமாக அன்னாசிப் பழத்தை சாப்பிட்டாலே, வயிற்றுப்போக்கு மற்றும் நெஞ்சு எரிச்சல் போன்றவை ஏற்படும். ஏனெனில் அதில் உள்ள அமிலம் மிகவும் மோசமானது. ஆகவே இத்தகைய பழத்தை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், அவர்களுக்கு எவ்வளவு பிரச்சனையை உண்டாக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். என்ன தான் இந்த பழத்தில் வைட்டமின் சி மற்றும் கர்ப்பமாக இருக்கும் போது உடலுக்கு அவசியமான, செரிமானத்தை சரியாக நடத்தும் நொதியைக் கொண்டாலும், இதை சாப்பிடுவதற்கு முன்பு மருத்துவரை அணுகுவது நல்லது. மேலும் இந்த பழத்தை சாப்பிட்டு, அந்த மாதிரியான பிரச்சனை எதுவும் ஏற்படாமல் இருக்கிறது என்று மற்றவர்களை சாப்பிட சொல்ல வேண்டாம். ஏனெனில் உங்கள் கர்ப்பப்பை வலுவுடன் இருக்கலாம். ஆனால் அவ்வாறே அனைவருக்கும் நடக்கும் என்று நினைப்பது தவறானது. எனவே பாதுகாப்பான பிரசவம் நடைபெற வேண்டுமெனில், இதனை சாப்பிடுவதை தவிர்ப்பதே நல்லது.
Social share:

G+1

Message plus récent Messages plus anciens Accueil

Tips

வாஸ்துப்படி வீட்டுல இந்த இடத்துல கடிகாரத்தை வைத்தால் , வீட்டில் செல்வம் குவியும்!

ஒரு வீட்டில் நாம் பிரச்சனையின்றி சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதில் வாஸ்து முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே தான் குடிப்புகும் முன், அந...

loading...