மன்மத வருஷ ராசி பலன்கள் 2015 !!

மங்களகரமான மன்மத வருஷப் பிறப்பின் பலன்களை, 4தமிழ்மீடியாவிலிருந்து எமது வாசகர்களுக்காக,

தூத்துக்குடி, பெருங்குளம் நவதிருப்பதி(தமிழ்நாடு) ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் கணித்து எழுதியுள்ளார். அவரது விரிவான ஜோதிட பலன்களை இங்கே காணலாம்.
மன்மத என்றால் வடமொழியில் இளமை என்று பொருள். சுப நிகழ்ச்சிகளை வழங்க வருகை தரும் மன்மத வருடம் தமிழ் வருடமான 60 வருடங்களில் 29-வது ஆண்டாக வருவது ஆகும். கலி பிறந்து 5116-வது வருடமாகும். சாலிவாகன ஆண்டு 1936-37-வது ஆண்டாகும்.  ஆங்கில வருடம் 2015-2016. பசலி 1424-1425 ஆகவும், கேரளாவில் அனுஷ்டிக்கப்படும் கொல்லம் ஆண்டு 1190-1191 ஆகவும் முகமதியர் ஆண்டான ஹிஜிரி ஆண்டு 1435-36 ஆகவும் வருகிறது. இதேபோன்று விக்ரம காப்தம் (வட இந்தியாவில் கணக்கிடப்படுவது) 2072-73  ஆகவும் வள்ளுவர் ஆண்டு 2046-2047 ஆகவும் வருகிறது.

நிகழும் மங்களகரமான 1190ம் ஆண்டு ஸ்வஸ்திஸ்ரீமன்மத வருஷம் உத்தராயணம் சித்திரை மாதம் 1ம் தேதி 14.04.2014 செவ்வாய்கிழமையும் கிருஷ்ணபக்ஷம் தசமியும் அவிட்ட நக்ஷத்ரமும் சுப நாமயோகமும் பத்ரை நாமகரணமும் சித்தயோகமும் கூடிய சுபதினத்தில் உதயாதி நாழிகை 15.44க்கு (காலை மணி 12.25க்கு)  இராஜஸ கடக லக்னத்தில் மகர ராசியில் குரு ஹோரையில் ஸ்ரீமன்மத வருஷம் பிறக்கிறது.

நவநாயகர் பலன்
மன்மத வருடத்திற்கு ராஜா- சனி, மந்திரி- செவ்வாய், சேனாதிபதி - சந்திரன், அர்க்காதிபதி- சந்திரன், ஸஸ்யாதிபதி - சுக்கிரன், தான்யாதிபதி - புதன், ரஸாதிபதி - சூரியன், நீரஸாதிபதி - சுக்ரன், மேகாதிபதி - சந்திரன் இந்த ஆண்டு தேவதை - மந்தாகினி, பசுநாயகர் - கோபாலன்.

இவற்றின்பலன் உலகில் விந்தையான மழை பெய்து விவசாயத்தில் விளைச்சல் திருப்தியாக இருக்கும். பயிர்வகைகள் செழிக்கும். அதே நேரத்தில் விலைவாசி உயர்வும் இருக்கும். வடநாட்டு பயிர் அழியும். மேற்கு நாட்டில்பயிர் செழிக்கும். அரசாங்கம் கட்டுபாட்டுடன் இயங்கும்.  தொழில் வியாபாரம் வளர்ச்சியடையும். கஜானா பணத்தட்டுப்பாடு இல்லாமல் இருக்கும். ஆனால் தனிநபர் பொருளாதார வசதி எதிர்பார்த்த அளவு உயராது.  தங்கம், வெள்ளி நவரத்தின கற்கள்  விலை படிப்படியாக உயரும்.  வெளிநாட்டு நிறுவனங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

கட்டுமான பொருட்கள் விலை அதிகரிக்கும். கட்டுமான சம்பந்தமான தொழிலில் இறக்கம் ஏற்படும். வீடு, மனை போன்றவற்றின் விலை குறையவும் செய்யாமல், உயரவும் செய்யாமல் நடுத்தரமாக இருக்கும். சகோதர நாடுகளுடன் பிரச்சனைகள் அதிகரிக்கும். காவல்துறை, ராணுவம் போன்வற்றில் இருப்பவர்களுக்கு பணிசுமை கூடும். அந்நிய நாட்டுடன் உறவுமுறை சுமூகமாக இருந்தாலும் எச்சரிக்கை தேவை.   வாகன விபத்துகள் அதிகரிக்கும். நெஞ்சகம் மற்றும் புற்றுநோய் அதிகரிக்கும். ஆஸ்திரேலியா கண்டத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கும். பெண்களுக்கு மரியாதை அதிகரிக்கும்.

கலிவெண்பா
மன்மத வருஷம் வெண்பா
மன்மதத்தின் மாரியுண்டு வாழுமுயிரெல்லாமே
நன்மை மிகும் பல் பொருளு நண்ணுமே – மன்னவரால்
சீனத்திற் சண்டையுண்டு தென் திசையிற் காற்று மிகுதி
கானப்பொருள் குறையுங்காண்

என்பது இடைக்காடர் எழுதிய மன்மத வருஷத்திய பலன் வெண்பா.

இதன் பலன் உலகத்தில் நல்ல மழை பொழியும். உலகத்தில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் நன்மை ஏற்படும். மனிதர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் மிகுதியாக கிடைக்கும். சீன தேசத்தில் சண்டை சச்சரவு ஏற்படலாம். இந்தியாவின் தெந்திசையில் மிகுந்த காற்று வீசும். காட்டிலிருந்து கிடைக்கும் பொருட்களுக்கு குறைவு ஏற்படும்.

ஆதாயம், விரயம்

இந்த  ஆண்டின் ஆதாயம் விரயம் எவ்வளவு என்று பார்த்தால் மேஷ விருச்சிக ராசியினருக்கு 14 ஆதாயம், 14 விரயமாகும்.  ரிஷபம், துலா ராசியினருக்கு 8 ஆதாயம் 8 விரயமாகும். மிதுனம், கன்னிராசியினருக்கு 11 ஆதாயம் 05 விரயமாகும். கடகராசியினருக்கு 11 ஆதாயம் 11 விரயமாகவும் தனுசு, மீன ராசியினருக்கு 2 ஆதாயம் 8 விரயமாகவும், மகரம், கும்ப ராசியினருக்கு 5 ஆதாயம் 2 விரயமாகவும் உள்ளது.

ஆதாயம் என்பது வரவு விரயம் என்பது செலவு என்று பொருள். மொத்தத்தில் 59 ஆதாயமும் 62 விரயமாகவும் வருவதால் நாட்டில் பட்ஜெட்டில் துண்டு விழும் என்று கூறலாம். சேமிப்புகள் கரையும். கடன் சுமை அதிகரிக்கும்.

தமிழ் புத்தாண்டு (மன்மத) பொதுபலன்
கடக லக்னத்தில் வருட பிறப்பு இருப்பதால் லக்னாதிபதி சந்திரன் ஆவார். ஆண்டு தொடக்கத்தில் லக்னாதிபதி சந்திரன் லக்னத்துக்கு ஏழாம் இடமான மகரத்தில் சுபகாரகன் குருவின் அருட்பார்யில் இருக்கிறார். சுகாதிபதி சுக்கிரனுடன் நாடிப்படி சம்பந்தம் பெற்றுள்ளார். செவ்வாய்க்கு கேந்திரம் பெற்றிருக்கிறார்.

செவ்வாய் வீட்டில் சனி அவரை செவ்வாய் பார்க்கிறார், இதன் பலன் இந்த ஆண்டு ரத்தம் சம்பந்தமான நோய் அதிகமாகும் நிலை உள்ளது.

லக்னாதிபதிக்கு மூன்றில் கேது இருக்கிறார். ஆன்மிகம் சம்பந்தமான இடங்களில் மக்களுக்கு பிரச்சனை வரலாம். ஒருவருக்கொருவர் சுமுகமான பேச்சு இல்லாமல் வேகத்துடன் பேசிக் கொள்வார்கள். லக்னாதிபதியை குரு பார்ப்பதும் லக்னத்தில் குரு இருப்பதும் சுபநிகழ்ச்சிகள் எதிர்பார்த்த அளவு தாராளமாக இருக்கும். புத்திரகாரகன் குரு லக்னத்திலேயே இருப்பதும் பஞ்சம பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தைப் பார்ப்பதும் புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும்.

கடன் பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். எதிர்ப்புகள் பெரிய பாதிப்பை தராது.

கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். விவாகரத்துக்கள் குறையும். தொழில் பங்குதாரர்களுக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கும்.

அரசியலில் திடீர் மாற்றங்கள்  உண்டாகலாம். புதிய நபர்களுக்கு அரசியலில் வரவேற்பு இருக்கும். அரசாங்கத்தின் திட்டங்கள் மக்களுக்கு நன்மை செய்பவையாக இருந்தாலும் ஒருசாரார் அதனை குறை கூறுவார்கள். அரசியல்வாதிகள் விமர்சனத்துக்கு உள்ளாவார்கள்.

லாபஸ்தானமான 11ம் இடத்தில் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் வாகனங்கள் வாங்குவோரது  எண்ணிக்கை உயரும். ஆனாலும் அது லக்னத்திற்கு பாதகஸ்தானம் என்பதால் வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் மிகவும் கவனமாக இருப்பது  அவசியம்.  காதல் திருமணங்கள் அதிகரிக்கும். காதல் பிரச்சனைகளும் தலை தூக்கும்.

கிரக பெயர்ச்சி (வாக்கியப்படி):
குருபெயர்ச்சி:
ஆனி மாதம் 20ம் தேதி (05.07.2015) ஞாயிற்றுக்கிழமை கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு மாறுகிறார்

ராகு கேது பெயர்ச்சி:
மார்கழி மாதம் 23ம் தேதி (08.01.2016) வெள்ளிக்கிழமை ராகு கன்னியிலிருந்து சிம்மத்திற்கும், கேது மீனத்திலிருந்து கும்பத்திற்கும் மாறுகிறார்கள்.


பன்னிரு ராசிகளுக்குமான விரிவான பலன்கள்.உரிய இராசிகளின் படங்கள் மீது அழுத்திப் பலன்களைக் காண்க.
   
 

இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.                                                                                                         நன்றி,
                                                                                                  4தமிழ்மீடியா
Social share:

G+1

Message plus récent Messages plus anciens Accueil

Tips

வாஸ்துப்படி வீட்டுல இந்த இடத்துல கடிகாரத்தை வைத்தால் , வீட்டில் செல்வம் குவியும்!

ஒரு வீட்டில் நாம் பிரச்சனையின்றி சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதில் வாஸ்து முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே தான் குடிப்புகும் முன், அந...

loading...