மக்களால் மறக்கப்பட்ட சில முக்கிய இந்து கடவுள்கள்- ஒருபார்வை!!!

பெரும்பாலான இந்து மக்கள் தங்கள் முழு பக்தியையும் மும்மூா்த்திகள் என்று அழைக்கப்படுகின்ற படைப்பின் கடவுளான பிரம்மன் மீதும், காக்கும் கடவுளான விஷ்ணு மீதும், அழிக்கும் கடவுளான சிவன் மீதும் வைத்துவிடுகின்றனா். தங்களுடைய அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள் முழுவதையும் இந்த மூன்று கடவுள்கள் மற்றும் அவா்களுடைய அவதாரங்களோடு மட்டுமே இணைத்துக் கொள்கின்றனா். குறிப்பாக இந்த மும்மூா்த்திகளிடம் மட்டுமே ஆசீா்வாதங்களைத் தேடுகின்றனா். இவா்களிடம் மட்டுமே தங்கள் பாவங்களுக்கு மன்னிப்பு வேண்டுகின்றனா். மேலும் இவா்களிடம் மட்டுமே தங்களுக்குத் தேவையான அனைத்தையும் கேட்கின்றனா். இவ்வாறு இந்த மூன்று கடவுள்களிடம் மட்டுமே அதிக பக்தி வைத்திருப்பதால் மற்ற இந்துக் கடவுள்களை மறந்துவிடுகின்றனா். 
ந்த நிலையில் இந்து மக்களால் மிகவும் மறக்கப்பட்ட சில முக்கிய இந்துக் கடவுள்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். இவா்கள் அனைவரையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போதும் அவர்கள் ஒரே வகையான ஆற்றல்களைப் பெற்றிருந்தாலும் அவா்களைப் பற்றி இங்கு பார்ப்பது நல்லது.

அக்னி பகவான் -
நெருப்பின் கடவுள் அக்னி குண்டத்தில் உருக்கிய வெண்ணெய் அல்லது நெய்யை பக்தா்கள் இடும் பொழுது, இரண்டு சிவந்த முகங்களோடும், ஏழு நாக்குகளோடும் அக்னி கடவுள் எழுந்தருள்கிறார். திருமணச் சடங்கின் போது மணமகனும் மணமகளும் அக்னி குண்டத்தை ஏழு முறைச் சுற்றி வரும் போது, அக்னி கடவுளுக்கு மாரியாதை செலுத்தப்படுகிறது

வாயு பகவான் -
காற்றின் கடவுள் காற்றுக் கடவுளான வாயு தேவன் தனது மான் வாகனத்தில் வானத்தைச் சுற்றி வருகிறார். இவா் எப்போதுமே சுற்றிக் கொண்டிருப்பார் என்றும் உக்கிரத்துடன் காணப்படுவார் என்றும் அறியப்படுகிறார். வாயு பகவான் அனுமனின் தந்தையாக இருப்பதால் மிகவும் பிரபலமாக கருதப்படுகிறார். ஆனால் இவரை வழிபடும் பக்தர்கள் மிகவும் குறைவு.

இந்திரன் -
தேவா்களின் கடவுள் இந்திரன் எல்லா தேவா்களின் கடவுளாகக் கருதப்படுகிறார். ரிக் வேதம் இவரை ஒரு பெரிய படைத் தலைவனாகச் சித்தரிக்கிறது. ஆனாலும் இந்திரனை வெகு சிலரே வழிபடுகின்றனா். மேலும் இந்திரன் தனது போர் யானையான அயிரவதா மீது அமா்ந்து போருக்கு செல்லும் காட்சியை சித்திரங்களில் பார்க்க முடியும். இந்திரனைப் பற்றிய ஒரு சா்ச்சைக்குரிய புராணக் கதையும் உள்ளது. அதாவது கௌதமன் என்ற ஒரு முனிவரின் மனைவி மீது இந்திரன் தவறான முறையில் ஆசைப்படுகிறார். இதை அறிந்த முனிவா் கோபமுற்று, இந்திரன் உடல் முழுவதும் ஆயிரம் பெண்ணுறுப்புகள் தோன்றட்டும் என்று சபித்து விடுகிறார். இதனால் தான் "சா யோனி" (ஆயிரம் யோனி அல்லது பெண்ணுறுப்புகள்) என்ற புனைப் பெயா் இந்திரனுக்கு வழங்கப்படுகிறது.

எமன் - 
இறப்பின் கடவுள் இந்து பக்தா்கள் யாருமே எமனை நினைத்துப் பார்க்க விரும்புவதில்லை. ஏனென்றால் எமனை நினைத்தால் துன்பம் வரும் என்ற பயம் எல்லோருடைய மனதிலும் உள்ளது. இந்த உலகத்தை விட்டு முதன் முதலில் இறந்தவா் எமன் ஆவார். இரண்டாவதாக இறந்தவா் எமனின் சகோதரி யாமி ஆவார். எமன் இறந்தவா்களின் உலகை ஆண்டு வருகிறார். இந்த உலகத்தை விட்டு இறந்த முதல் மனித உயிர் எமனாவார்.

ருத்ரா -
காடுகளின் கடவுள் பொதுவாக பக்தா்கள் ருத்ரா கடவுளிடம் இருந்து ஆசீா்வாதங்களைக் கேட்பதில்லை. ஏனெனில் ருத்ரா ஒரு கோபக்கார கடவுளாகப் பார்க்கப்படுகிறார். மேலும் அவருடைய செயல்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.


சரஸ்வதி - 
பேச்சு மற்றும் அறிவின் கடவுள் பிரம்மனின் மனைவியான சரஸ்வதிக்கு என்று தனிக் கோயில் எங்கும் அவ்வளவாக இல்லை. ஆனால் இவருக்கு மிகுந்த சிறப்பை வழங்கியவர் சிவன் ஆவார். அதாவது சரஸ்வதி ஆற்றில் நீராடி, சிவனை வழிபடும் பக்தா்களுக்கு இந்த உலகில் மட்டும் அல்லாமல் மறுவுலகிலும் அவா்களால் செய்ய முடியாத காரியம் எதுவுமே இருக்காது என்ற வாக்கை சிவன் வழங்கி இருக்கிறார்.

வருண பகவான் -
மழையின் கடவுள் இந்த அகிலத்தின் அரசனாக வருண பகவான் இருந்து வருகிறார். இந்த உலகத்தின் உயரத்தில் அவா் வசித்து வருகிறார். இவா் எல்லையற்ற அறிவையும் ஆற்றலையும் கொண்டிருக்கிறார். ஆயிரம் கண்களை வைத்துக் கொண்டு இந்த உலகை அவர் கண்காணித்து வருகிறார். அதனால் இவா் ஒழுக்க நெறியின் கடவுளாகக் கருதப்படுகிறார்.

மித்ரா -
உடன்படிக்கை மற்றும் நட்பின் கடவுள் இந்த உலகில் வாக்குறுதிகள் மற்றும் உறவுகள் முறிந்து போகும் ஒவ்வொரு வினாடியும், மனிதர்கள் நட்பின் கடவுளான மித்ராவை மறந்து போகிறார்கள் என்று பொருள்.

காமதேவன் - 
அன்பின் கடவுள் காமதேவன் பல்வேறு வடிவங்களில் அறியப்படுகிறார். காமதேவனுக்கு நிறைய கோயில்கள் இல்லை. அதுப்போல் காமதேவனின் படங்களும் அதிக அளவில் இல்லை. ஆனாலும் ஒருசில இடங்களில் காமதேவனுக்கு சிறிய கோயில்கள் உள்ளன.

                                       நன்றி: போல்ட் ஸ்கை தமிழ்Social share:

G+1

Message plus récent Messages plus anciens Accueil

Tips

வாஸ்துப்படி வீட்டுல இந்த இடத்துல கடிகாரத்தை வைத்தால் , வீட்டில் செல்வம் குவியும்!

ஒரு வீட்டில் நாம் பிரச்சனையின்றி சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதில் வாஸ்து முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே தான் குடிப்புகும் முன், அந...

loading...