ஒரு நாளைக்கு எவ்வளவு வாழைப்பழங்களை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள்!!!


ஒரு நாளைக்கு 4,800 மிகி பொட்டாசியம்
நமது உடலுக்கு ஒரு நாளைக்கு 4,800 மில்லிகிராம் பொட்டாசியம் தேவைப்படுகிறது. ஆனால் ஒரு வாழைப்பழத்திலோ வெறும் 400 மிகி தான் உள்ளது.


400 வாழைப்பழம்
உயிரைக் குடிக்கும் அளவில் எனில் சுமார் 400 வாழைப்பழங்களை ஒரே நேரத்தில் சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டாலும், அதில் உள்ள முழு பொட்டாசியமும் நேரடியாக சிறுநீரகங்களைத் தாக்கினால் மட்டுமே உயிரிழக்கக்கூடும்.


குடல் தடுக்கும்

ஆனால், வாழைப்பழத்தை சாப்பிடும் போது, பாதி வழியிலேயே பாதி பொட்டாசியத்தை குடல் உறிஞ்சிவிடும். எஞ்சிய பொட்டாசியம் தான் சிறுநீரகங்களுக்குச் செல்லும். எனவே 400 பழங்களை ஒரே நேரத்தில் உட்கொண்டாலும் மரணம் ஏற்படப் போவதில்லை என்று லண்டனில் இருக்கும் கிங்ஸ் கல்லூரியைச் சேர்ந்த காத்தரின் கொலின்ஸ் என்னும் உணவுமுறை நிபுணர் கூறியுள்ளார்.கதிரியக்க விஷம்
வாழைப்பழத்தைக் குறித்து மற்றொரு மூடநம்பிக்கை மக்களிடையே உள்ளது. அது என்னவெனில், வாழைப்பழத்தால் கதிரியக்க விஷம் பரவுகிறது என்பது தான்.


கதிரியக்க விஷம் குறித்து கேத்தரின் கூறுவது.
ஒவ்வொருவரின் உடலிலும் கதிரியக்கம் உள்ளது என்று கூறுவதோடு, வாழைப்பழத்தினால் கதிரியக்க விஷம் பரவுவதற்கு ஒருவர் ஒரு வேளைக்கு 10 லட்சம் வாழைப்பழங்களை உட்கொள்ள வேண்டும் என்கிறார்.

 

 

                                                                                 ஒரு நாளைக்கு 274 வாழைப்பழங்கள்
அதுமட்டுமின்றி, கேத்தரின் ஒரு நாளைக்கு 274 வாழைப்பழங்கள் வீதம் தொடர்ந்து ஏழு வருடங்கள் உட்கொண்டு வந்தால் தான், உடலில் கதிரியக்க விஷம் ஏற்பட்டுள்ள அறிகுறிகளே தென்படும் என்கிறார். எனவே, எவ்வித பயமும் இல்லாமல் ஒரு நாளைக்கு எவ்வளவு வாழைப்பழங்களை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள்.


                                                                                                             நன்றி
                                                                                               (தமிழ் போல்ட் ஸ்கை.|)
Social share:

G+1

Message plus récent Messages plus anciens Accueil
loading...