உங்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து உங்கள் குணாதிசயங்கள் என்ன என்று இனி தொடர்ந்து தெரிந்துக் கொள்ளலாம்!!!

ஜோதிடம் பல வகைகளில் இருக்கிறது. இதில் ஒன்று தான் எண் கணித முறை. ஆங்கிலத்தில் இதை நியூமராலஜி என்று கூறுவார்கள். ஒரு குழந்தை பிறந்த நேரம் மற்றும் நாளை வைத்து அந்த குழந்தையின் பெயர் எந்த எழுத்தில் தொடங்கினால் சிறப்பாக அமையும் என கணித்து கூறப்படுவது தான் இந்த எண் கணிதம் முறை.
(பண்டைய காலம் முதலே பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்கும் போது அதன் முதல் எழுத்தை தேர்வு செய்வது என்ற பழக்கம் பண்டைய காலம் முதலே இருந்து வந்துள்ளது. இதற்காக ஜோதிடம் மற்றும் எண் கணித முறைகளை பின்பற்றி வந்தனர்.)
கை ரேகையை வைத்து ஒருவரது குணாதிசயங்கள் எப்படி இருக்கும், உறவு, செல்வம் தொழில் பற்றி எல்லாம் கூறுகிறார்களோ. அதே போல இந்த நியூமராலஜியிலும் கூட இந்த நேரத்தில் பிறந்த ஒருவருக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயர் வைத்தால் அவர் சிறப்பாக இருப்பார் என்று கூறப்படுகிறது.

இன்று தாய் தந்தையின் பெயரை கலந்து குழந்தைக்கு பெயர் வைக்கும் முறைக்கு நாம் கொஞ்சம், கொஞ்சமாக மாறி வருகிறோம். ஆனாலும், இந்த அறிவியல் யுகத்திலும் நியூமராலஜி பார்த்து பெயர் வைக்கும் முறை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்துக்கள் முறை                     இந்துக்கள் முறையில், குழந்தை பிறந்த நாள் மற்றும் நேரத்தை வைத்து ஜோதிடர் அந்த குழந்தையின் பெயர் எந்த எழுத்தில் துவங்குவது நல்லது என கூறுவது உண்டு. இதற்காக பெயர் வைக்கும் விழாவும் நடக்கும். இது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.


சீக்கியர்கள் முறை                           சீக்கிய முறையில் குரு கிரந்த் சாஹிப் ஸ்லோகத்தில் இருந்து முதல் எழுத்து எடுக்கும் முறை கடைப்பிடிக்கப்படுகிறது. மற்றும் மேலும் சில வழிமுறைகள் முதல் எழுத்தை தேர்ந்தெடுக்க பின்பற்றப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.


இஸ்லாம் முறை                 இஸ்லாமில் பெயர் சூட்டுவது என்பது மிகவும் முக்கியமனாதாக கருதப்படுகிறது. தவறான பெயரை அவர்கள் எப்போதும் வைக்க முற்படுவதில்லை. மேலும் குழந்தைக்கு வைக்கப்படும் பெயரானது எந்த வகையிலும் தவறான அர்த்தத்தில் இருந்துவிட கூடாது என கவனமாக இருப்பார்கள்.


ஆங்கில எழுத்துக்கள்             அனைத்து கலாச்சாரம் மதத்திலும் அவர்களது சடங்கு சம்பிரதாய முறைகளை வைத்து தான் பெயரின் முதல் எழுத்தாய் தேர்ந்தேடுகிறார்கள். ஆங்கில எழுத்துகளிலும் இந்த தாக்கம் இருக்கிறது. இது ராசி, மற்றும் அவர்களிடம் தென்படும் தாக்கம் மற்றும் செல்வாக்கை ஏற்படுத்துகிறது என நம்பப்படுகிறது.


ரிப்பீட் எழுத்துக்கள்(Repeat)   உங்கள் பெயரில் சில எழுத்துக்கள் மீண்டும், மீண்டும் வரும்படி இருக்கும், சிலரது பெயரில் "A", "E","I", "O" போன்ற எழுத்துக்கள் மீண்டும், மீண்டும் வருவது போன்று இருக்கும். இதை வைத்து ஒருவரின் நேர்மறை, எதிர்மறை குணாதிசயங்கள் பற்றி அறிந்துக் கொள்ள முடியுமாம்.


A, I, J, Q, Y A, I, J, Q, Y,                          இந்த எழுத்துக்கள் இரண்டுக்கும் மேற்பட்ட முறை இடம் பெற்றிருந்தால், அந்த நபர் தைரியமானவராகவும், உண்மையை விரும்பும் நபராகவும், ஆதிக்கம் செலுத்தக் கூடியவராகவும் இருப்பார் என கூறப்படுகிறது. 


A, I, J, Q, Y                                   சுதந்திரமாக செயல்பட, தன்னிலையை உயர்த்திக் கொள்ள போராடுவார்கள், ஒத்துழைத்து வேலை செய்வார்கள், பணம், மற்றும் சக்திக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.


B, K, R B, K, R, ஒன்றுக்கும் மேற்ப்பட்ட முறை வந்திருந்தால், அவர் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடிய நபராகவும், இசை மற்றும் கலையில் நாட்டம் முடையவராகவும், பொதுவாக அனைவருக்கும் உதவும் நபராக இருப்பார் என கூறப்படுகிறது.


C, G, L, S C, G, L, S ஒன்றுக்கும் மேற்ப்பட்ட முறை வந்திருந்தால், அவர்களிடம் கற்பனை திறன் மிகுதியாக இருக்கும். எழுத்து, கலை, தொழில் புரிதல் போன்றவற்றில் சிறந்து விளங்குவார்கள்.


C, G, L, S                                          கொஞ்சம் சுயநலமாகவும் நடந்துக் கொள்வார்கள். கவனம் சிதறுதல், சக்தியை வீணாக்குவது போன்றவற்றில் இவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.


U, V, W U, V, W, இவர்களிடம் கலை சார்ந்த திறமை மிகுதியாக இருக்கும். மனித நேயம் மிக்கவர்களாக இருப்பார்கள்.மற்றவர்களுக்கு உதவும் குணம் இயற்கையாகவே இவர்களிடம் அதிகம் காணப்படும்.


U, V, W உள்ளூர் வாழ்க்கையை தான் விரும்புவார்கள். புகழ் மற்றும் சமூக பெயர் மிக்கவர்களாக இருப்பார்கள். சமூக சேவை மற்றும் வெளியிடங்களுக்கு சென்று உதவும் மனப்பான்மை கொண்டிருப்பார்கள். 


D, M, T D, M, T: கடினமாக உழைக்கும் குணம், தொழிலை விரிவாக்கம் செய்ய முயற்சி, பணத்தை சரியாக பயன்படுத்துவது, மேலாண்மையில் சிறந்து விளங்குதல் போன்றவற்றில் இவர்கள் சிறந்து காணப்படுவார்கள். உறவினருக்கு உதவ முற்படுவார்கள். இது உங்கள் செயல்திறனை குறைக்கவும் வாய்ப்புகள் இருக்கின்றன.


O,Z O,Z: ஆழ்ந்த சிந்தனை, ஆராய்ச்சி, கற்றல், தவம், உண்மையை தேடுதல் போன்றவற்றில் நிறைய ஈடுபடுவர்கள். கூட்டத்தில் ஒருவனாக நிற்காமல், தனித்து நிற்க முயற்சிப்பார்கள்.


P, F P, F: தொழில் புரிதலில் புத்திசாலியாக திகழ்வார்கள். தொழில், பயணம், மகிழ்ச்சி நிறைய செலவு செய்தல், இடங்கள் வாங்குதல் போன்றவற்றில் ஈடுபடுவார்கள்.


E, H, N, X E, H, N, X: பொது பணிகளில் சிறந்து விளங்குவார்கள். ஆறேழு முறை இந்த எழுத்து ஒருவரது பெயரில் இடம் பெறுகிறது எனில், அவர் உணவு, குடி மற்றும் உடலுறவில் நாட்டம் அதிகமாக கொண்டிருப்பார் என கூறப்படுகிறது.                                                                                நன்றி: (தமிழ் போல்ட் ஸ்கை.)
Social share:

G+1

Message plus récent Messages plus anciens Accueil

Tips

வாஸ்துப்படி வீட்டுல இந்த இடத்துல கடிகாரத்தை வைத்தால் , வீட்டில் செல்வம் குவியும்!

ஒரு வீட்டில் நாம் பிரச்சனையின்றி சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதில் வாஸ்து முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே தான் குடிப்புகும் முன், அந...

loading...