மலச்சிக்கலைப் போக்க இஞ்சியை எப்படியெல்லாம் சாப்பிடலாம்? Yazhpanam

ஒவ்வொருவரும் மலச்சிக்கல் பிரச்சனையை கட்டாயம் சந்தித்திருப்போம். சிலருக்கு இப்பிரச்சனை முற்றிய நிலையில் மிகவும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். இதை சரிசெய்ய பலவற்றை முயற்சித்திருப்பார்கள். 

அதில் மலச்சிக்கலைப் போக்க இஞ்சி பெரிதும் உதவியாக இருக்கும். ஏனெனில் இஞ்சியில் இயற்கையாக மலமிளக்கும் மன்மை உள்ளது. எனவே இவற்றை மலச்சிக்கலின் போது எடுத்தால், குடலியக்கம் சீராக செயல்படும். 

இங்கு மலச்சிக்கலைப் போக்க இஞ்சியை எப்படியெல்லாம் எடுக்கலாம் என கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

 இஞ்சி                     இஞ்சியின் ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டு, மெதுவாக மென்று அதன் சாற்றினை விழுங்க வேண்டும். இதன் மூலம் செரிமானம் மேம்படுத்தப்பட்டு, மலச்சிக்கலில் இருந்து விடுதலை கிடைக்கும்.
இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு எலுமிச்சை சாற்றில் சிறிது இஞ்சியைத் தட்டிப் போட்டு, அத்துடன் சுடுநீரை ஊற்றி தேன் கலந்து தினமும் 2-3 டம்ளர் குடித்து வர, மலச்சிக்கல் குணமாகும்.கரும்பு ஜூஸ் மற்றும் இஞ்சி கரும்பு ஜூஸில் இஞ்சியைத் தட்டிப் போட்டு, தேன் கலந்து குடித்து வருவதன் மூலமும், மலச்சிக்கல் பிரச்சனையைத் தடுக்கலாம்.
இஞ்சி டீ 
கொதிக்கும் நீரில் இஞ்சியைத் தட்டிப் போட்டு நன்கு கொதிக்க வைத்து, பின் அதனை வடிகட்டி தேன் கலந்து குடிக்க, குடலியக்கம் சீராகி, மலச்சிக்கல் நீங்கும்.

 சூப்
வெஜிடேபிள் சூப் செய்து, அத்துடன் இஞ்சியை துருவிப் போட்டு குடித்து வர, மலச்சிக்கல் குணமாகும்.


வேறு சில நன்மைகள்
இஞ்சியை தினமும் உணவில் சேர்ப்பதன் மூலம் அதில் உள்ள ஜிஞ்செரால் என்னும் பொருள், குமட்டல், சளி, இருமல், மூட்டு பிரச்சனைகள், இதய நோய்கள், புற்றுநோய் போன்றவற்றை சரிசெய்ய உதவும்.


நன்றி: போல்ட் ஸ்கை
Social share:

G+1

Message plus récent Messages plus anciens Accueil

Tips

வாஸ்துப்படி வீட்டுல இந்த இடத்துல கடிகாரத்தை வைத்தால் , வீட்டில் செல்வம் குவியும்!

ஒரு வீட்டில் நாம் பிரச்சனையின்றி சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதில் வாஸ்து முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே தான் குடிப்புகும் முன், அந...

loading...