தினமும் நீங்கள் போதிய அளவில் தண்ணீர் குடிப்பதில்லை என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்!!!

நம்மை புத்துணர்ச்சியூட்டுவதில் குளிர்ச்சியான தண்ணீருக்கு இணை வேறு எதுவும் வர முடியாது. அதிலும் கோடையில் என்ன தான் ஜூஸ் குடித்தாலும், குளிர்ச்சியான நீரை ஒரு டம்ளர் பருகினால் தான் தாகமே அடங்கும். அத்தகைய நீரை தினமும் ஒருவர் போதிய அளவில் பருகி வந்தாலே பல பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
 
குறிப்பாக கோடையில் குடிக்கும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும். இல்லாவிட்டால், உடல் வறட்சி ஏற்பட்டு அதன் மூலம் பல உடல்நல கோளாறுகளை சந்திக்க நேரிடும். தற்போது அதிகப்படியான வேலைப்பளுவின் காரணமாகவும், அலுவலகத்தில் ஏசி இருப்பதாலும், பலரும் தண்ணீர் குடிப்பதையே மறந்துவிடுகின்றனர். 
 
நீங்கள் இப்படி தினமும் போதிய அளவில் தண்ணீரைக் குடிக்கத் தவறினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். சரி, இப்போது அவை என்னவென்று பார்ப்போமா!!!

வாய் வறட்டு போகும்
ஒருவர் போதிய அளவில் தண்ணீர் பருகாமல் இருந்தால், வாய் அதிகம் வறட்சி அடையும். இதனால் அடிக்கடி ஏதேனும் பருக வேண்டுமென்று தோன்றும். ஆனால் சர்க்கரை கலந்த குளிர்பானங்கள் இதற்கு ஓர் தற்காலிக தீர்வாகத் தான் இருக்கும். அதுவே போதிய அளவில் தினமும் ஒருவர் தண்ணீரைப் பருகினால், சீத சவ்வுகளில் வாய் மற்றும் தொண்டைக்கு வேண்டிய ஈரப்பசையை வழங்கி, நீண்ட நேரம் வாய் வறட்சியடையாமல் தடுக்கும்.


சருமம் வறட்சியடையும் உடலிலேயே சருமம் தான் மிகப்பெரிய உறுப்பு. இதனை எப்போதும் ஈரப்பசையுடன் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். உங்கள் உடலில் போதிய அளவில் நீர்ச்சத்து இல்லாவிட்டால், முதலில் சருமம் அதிகம் வறட்சியடையும். மேலும் வியர்வையே வெளிவராது. இம்மாதிரி நீங்கள் உணர்ந்தால், நீங்கள் குடிக்கும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் என்று அர்த்தம்.

அதிக தாகம் 
முக்கியமான ஓர் அறிகுறி, உங்களுக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகமே அடங்காமல் இருந்தால், அது உங்கள் உடலில் போதிய நீர்ச்சத்து இல்லை என்று அர்த்தம்.


வறட்சியான கண்கள் 
போதிய அளவில் தண்ணீர் பருகாமல் இருந்தால், அதனால் வாய் மற்றும் தொண்டையில் மட்டுமின்றி, கண்களிலும் வறட்சியை உண்டாக்கும். எனவே உங்கள் பார்வைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், போதிய அளவில் தண்ணீரைப் பருகுங்கள்.


மூட்டு வலிகள் 
நமது குருத்தெலும்பு மற்றும் முதுகுத்தண்டு வட்டுகள் 80% நீரால் ஆனது. எனவே எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் சத்துக்கள் மட்டுமின்றி, நீரும் முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே உங்களுக்கு மூட்டு வலிகள் வருவதற்கு குடிக்கும் நீரின் அளவு குறைவாக இருப்பதும் ஓர் காரணம் என்பதைப் புரிந்து கொண்டு, குடிக்கும் நீரின் அளவை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

தசைகளின் நிறை குறையும் 
தசைகளின் உருவாக்கத்திலும் நீர் முக்கிய பங்கை வகிக்கிறது. குடிக்கும் நீரின் அளவு குறைவாக இருந்தால், தசைகளின் அளவும் குறைவாகத் தான் இருக்கும். எனவே உங்களுக்கு தசைகள் நன்கு வளர்ச்சியடைய வேண்டுமானால், நீரை அதிகம் பருகுங்கள்.


கழிவுகள் தேங்கும் 
நீரை அதிகம் குடிப்பதன் மூலம் டாக்ஸின்கள் உடலில் இருந்து வெளியேற்றப்படும். ஆனால் கழிவுகளை வெளியேற்ற உடல் உறுப்புக்களின் சீரான இயக்கத்திற்கு தண்ணீர் என்னும் பெட்ரோல் வேண்டும். இல்லாவிட்டால் கழிவுகள் உடலில் தேங்கி, அதனால் பல பிரச்சனைகளை உண்டாக்கும்.

 
மிகுந்த சோர்வு 
சோர்வு பல பிரச்சனைகளுக்கு ஓர் அறிகுறியாக இருக்கலாம். ஆனால் உங்கள் உடலில் போதிய அளவில் நீர் இல்லாவிட்டால், சோர்வும் அதை உணர்த்தும் ஓர் முதன்மையான அறிகுறியாகும். அதிலும் மிகுந்த சோர்வுடன், எப்போதும் தூக்கம் வருவது போன்ற உணர்வை உணரக்கூடும்.


செரிமான பிரச்சனைகள் 
முன்பு கூறியது போல், எப்படி போதிய அளவு தண்ணீர் குடிப்பதால், வாய் மற்றும் தொண்டையில் உள்ள சீத சவ்வுகள் வறட்சியடைவதை தடுக்கிறதோ, அது அப்படியே செரிமான மண்டலத்திற்கும் பொருந்தும். எனவே உங்களுக்கு செரிமான பிரச்சனைகள் வருமாயின், குடிக்கும் நீரின் அளவை அதிகரித்துக் கொள்ளுங்கள்.


மலச்சிக்கல் 
உங்களுக்கு கோடையில் மலச்சிக்கல் ஏற்படுகிறதா? அப்படியெனில் அதற்கு காரணம் ஒன்று தவறான உணவுப் பழக்கம் அல்லது குடிக்கும் நீரின் அளவு குறைவாக இருப்பது. எனவே எதுவாக இருந்தாலும், கோடையில் மலச்சிக்கலை சந்தித்தால், அதற்கு குடிக்கும் நீரின் அளவு குறைவாக இருப்பது தான் முக்கிய காரணமாக இருக்கும்.


சிறுநீர் கழிப்பது குறையும் முன்பெல்லாம் ஒரு நாளைக்கு 4-5 முறை சிறுநீர் கழித்து, திடீரென்று 1-2 முறை தான் சிறுநீர் கழிக்க செல்கிறீர்களா? அப்படியெனில் உங்கள் உடலில் நீர்ச்சத்து குறைவாக உள்ளது என்றும், நீங்கள் சரியான அளவில் தண்ணீர் குடிப்பதில்லை என்றும் அர்த்தம்.Thanks:
போல்ட் ஸ்கை

Social share:

G+1

Message plus récent Messages plus anciens Accueil
loading...