யாருக்கெல்லாம் வருமான வரி பொருந்தும்? எத்தனைச் சதவீதம் வருமான வரி கட்ட வேண்டும்?

(இப் பதிவு தமிழ்நாடு மற்றும் இந்தியாவுக்குக்கான தகவல் பதிவாகும்)

வருமான வரி நான் கட்ட வேண்டுமா, இல்லையா என்று சந்தேகத்துடன் இருப்பவர்களுக்கு யாருக்கெல்லாம் வருமான வரி பொருந்தும்? எத்தனைச் சதவீதம் வரி கட்ட வேண்டும்? என்பதைப் பற்றி நாம் இங்குப் பார்ப்போம்.


 __________________________________________
வயதுக்கேற்ற பிரிவுகள் வருமான வரி செலுத்துபவர்களை வயதுக்கு ஏற்றவாறு மூன்று பிரிவுகளாக பிரித்துள்ளனர். பொதுப் பிரிவினர்கள் - ஆண்/பெண் 60 வயதுக்குள் மூத்த குடிமக்கள் - 60 முதல் 80 வயதுக்குள் மிகவும் மூத்த குடிமக்கள் - 80 வயதுக்கு மேல்.
அடிப்படை வருமான வரி விலக்கு பொதுப் பிரிவினர்களுக்கு ரூ.2,50,000 வரையும், மூத்த குடிமக்களுக்கு 3,00,000 வரியும், மிகவும் மூத்த குடிமக்களுக்கு - 5,00,000 வரியும் வரிவிலக்கு உண்டு.10% வரி யாருக்குப் பொருந்தும் பொது பிரிவினரின் நீங்கள் வருகிறீர்களா உங்கள் வருமானம் ரூ. 2,50,001 முதல் 5,00,000 வரை இருந்தால், மூத்த குடிமக்கள் பிரிவில் வருகிறீர்களா உங்கள் வருமானம் ரூ. 3,00,001 முதல் 5,00,000 வரை இருந்தால் நீங்கள் 10% வரி கட்ட வேண்டும். மிகவும் மூத்த குடிமக்களுக்கு வரி இல்லை.
20% வரி யாருக்குப் பொருந்தும் பொது பிரிவினரின் நீங்கள் வருகிறீர்களா உங்கள் வருமானம் ரூ. 5,00,001 முதல் 10,00,000 வரை இருந்தால், மூத்த குடிமக்கள் பிரிவில் வருகிறீர்களா உங்கள் வருமானம் ரூ. 5,00,001 முதல் 10,00,000 வரை இருந்தால், மிகவும் மூத்த குடிமக்களுக்கு ரூ. 5,00,001 முதல் 10,00,000 வரை இருந்தால் நீங்கள் 20% வரி கட்ட வேண்டும்.

30% வரி யாருக்குப் பொருந்தும் பொது பிரிவினரின் நீங்கள் வருகிறீர்களா உங்கள் வருமானம் ரு.10,00,000 மேல் இருந்தால், மூத்த குடிமக்கள் பிரிவில் வருகிறீர்களா உங்கள் வருமானம் ரு.10,00,000 மேல் இருந்தால், மிகவும் மூத்த குடிமக்களுக்கு ரு.10,00,000 மேல் இருந்தால் நீங்கள் 30% வரி கட்ட வேண்டும்.

1 கோடிக்கும் மேல் வருமானம் இருந்தால்... உங்கள் வருமானம் 1 கோடிக்கும் மேல் இருந்தால் கூடுதல் கட்டணமாக 15% வரி மற்றும் கல்வி தீர்வையாக 3% வரி என மொத்தம் 18% கூடுதல் வரி நீங்கள் வரியாகச் செலுத்த வேண்டும்.

 நன்றி: G_Returns

Social share:

G+1

Message plus récent Messages plus anciens Accueil

Tips

வாஸ்துப்படி வீட்டுல இந்த இடத்துல கடிகாரத்தை வைத்தால் , வீட்டில் செல்வம் குவியும்!

ஒரு வீட்டில் நாம் பிரச்சனையின்றி சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதில் வாஸ்து முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே தான் குடிப்புகும் முன், அந...

loading...