ஒரே மாதத்தில் 5 கிலோ வரை குறைக்கலாம் தெரியுமா?...காலை உணவிற்கு முன் இத ஒரு டம்ளர் குடிச்சா!!!

பொதுவாக எடையைக் குறைக்க நினைப்பவர்கள் வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாது என்றும், குண்டாக நினைப்பவர்கள் வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டால், வேகமாக குண்டாகிவிடலாம் என்ற கருத்தும் மக்களிடையே உள்ளது. ஆனால் இந்த வாழைப்பழம் ஒருவரது உடல் எடையைக் குறைக்கவும் உதவும்.
Yummy Banana Drink That Can Help You Lose 5 Kilos In A Month!

ஒருவரது உடல் எடை அதிகமாவதற்கு மோசமான டயட் மற்றும் உடற்பயிற்சியின்மை மட்டுமின்றி, பரம்பரை, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், மருந்துகளின் பக்கவிளைவுகள் மற்றும் மெட்டபாலிசம் குறைவாக இருப்பது போன்றவைகளும் காரணங்களாகும்.
ஆனால் தினமும் போதுமான உடற்பயிற்சி செய்து, மெட்டபாலிசத்தைத் தூண்டும் ஒருசில பானங்களைப் பருகி வருவதன் மூலம் உடல் எடையை நினைத்தவாறு வேகமாக குறைக்க முடியும். இங்கு உடல் எடையைக் குறைக்க உதவும் அற்புதமான வாழைப்பழம் பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

நன்கு கனிந்த வாழைப்பழம் - 1
ஆளி விதை - 1 டேபிள் ஸ்பூன்
சோயா பால் - 1/2 கப்

உண்மை #1

இந்த இயற்கை பானததை ஒருவர் தொடர்ச்சியாக குடித்து வந்தால், ஒரு மாதத்தில் 5 கிலோ வரை உடல் எடையைக் குறைக்க முடியும். குறிப்பாக தினமும் ஆரோக்கியமான டயட்டுடன், 40 நிமிட உடற்பயிற்சியை செய்து, எண்ணெய் பலகாரங்களை முற்றிலும் தவிர்த்து வந்தால், இதன் முழுமையான பலனைக் காணலாம். இல்லாவிட்டால், இந்த பானத்தின் முழு நன்மையையும் பெற முடியாமல் போகும்.
உண்மை #2

உண்மை #2

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புக்களை வேகமாக கரைக்க உதவும். ஆளி விதையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும், கொழுப்புக்களை கரைக்கும் திறனை அதிகரிக்கும்.
இந்த பானத்தில் சேர்க்கப்படும் சோயா பாலில் கொழுப்புக்கள் குறைவாக உள்ளதால், எடை குறைக்கும் முயற்சியின் போது, இது உடலில் புரோட்டீன் அளவை சீராக பராமரிக்கும்.

தயாரிக்கும் முறை:

மிக்ஸியில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் போட்டு நன்கு அரைத்தால், எடையை வேகமாக குறைக்க உதவும் வாழைப்பழ பானம் தயார்.
குடிக்கும் முறை:

குடிக்கும் முறை:

இந்த பானத்தை ஒரு மாத காலம், தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன் குடித்து வர வேண்டும். ஒருவேளை சோயா பால் அலர்ஜி என்றால், கொழுப்பு குறைவான பாலைப் பயன்படுத்தி இந்த பானத்தைத் தயாரித்துக் குடிக்கலாம்.

நன்றி: போல்ட் ஸ்கை.
Social share:

G+1

Message plus récent Messages plus anciens Accueil

Tips

வாஸ்துப்படி வீட்டுல இந்த இடத்துல கடிகாரத்தை வைத்தால் , வீட்டில் செல்வம் குவியும்!

ஒரு வீட்டில் நாம் பிரச்சனையின்றி சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதில் வாஸ்து முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே தான் குடிப்புகும் முன், அந...

loading...