உங்களின் ஏடிஎம்(ATM) பரிவர்த்தனைகளை பாதுகாத்திடுங்கள்!!!


உங்களின் ஏடிஎம் பரிவர்த்தனைகளை பாதுகாத்திடுங்கள்


ஏடிஎம்கள் ஒரு பெரும் சௌகரியமாக இருக்கின்றன மற்றும் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பது என்பது உங்கள் பணத்தை துரிதமாக பெறும் ஒரு வழியாகும். உங்கள் வங்கி கணக்கை பாதுகாப்பதில் சமரசம் செய்வதை தவிர்க்க, எந்த முறையில் பணம் எடுத்தாலும் ஒரு பாதுகாப்பு-உணர்வுள்ள அணுகுமுறையை எப்போதும் பின்பற்றுவதே புத்திசாலித்தனமானது. நீங்கள் ஏடிஎம்மில் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளை பாதுகாத்திட கீழே கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறிப்புகளை பின்பற்றவும்:

 

பாதுகாப்பு குறிப்புகள்:
எப்போதுமே
  • உங்களின் பின் நம்பரை ஞாபகத்தில் வைத்திருக்கவும் மற்றும் அதனை குறித்து வைக்கவோ அல்லது வேறு யாருடனும் பகிர்ந்துக் கொள்ளவோ வேண்டாம்
  • உங்களுக்கு வரும் எஸ்எம்எஸ், கணக்கில் கையிருப்பு மற்றும் வங்கி ஸ்டேட்மென்ட்களை சரிபார்க்கவும், முரண்பாடுகள் எதுவும் இருந்தால் உடனடியாக ஐசிஐசிஐ வங்கிக்கு தெரியப்படுத்தவும்.
பரிவர்த்தனைக்கு முன்பு
  • உங்கள் கார்டை அந்நியர், குடும்ப உறுப்பினர், நண்பர் அல்லது வங்கி அதிகாரி என யாரிடமும் கொடுக்க வேண்டாம்.
  • நீங்கள் ஏடிஎம்-ஐ பயன்படுத்துகையில் அந்நியர் யாரும் உங்களுக்கு உதவ அனுமதிக்காதீர்கள்.
பரிவர்த்தனையின் போது
  • வரிசையில் நிற்கும் மற்றவர்களிடம் இருந்து ஒரு பாதுகாப்பான தூரத்தில் நிற்கவும்.
  • எப்போதுமே ஏடிஎம் மெஷினுக்கு நெருக்கமாக நின்று கொள்ள வேண்டும் மற்றும் நீங்கள் பின் எண்ணை அழுத்தும் போது உங்கள் உடலையும், கையையும் பயன்படுத்தி கீபேட்-ஐ மறைத்துக் கொள்ளவும்.
பரிவர்த்தனைக்கு பிறகு
  • உங்களின் பரிவர்த்தனை ஸ்லிப்பை ஏடிஎம்மில் அப்படியே விட வேண்டாம். அதனை வீசுவதற்கு முன்பு கிழித்து விடவும்.
  • ஏடிஎம்-ஐ விட்டு நகரும் முன்பு ‘கேன்சல்’ பட்டனை அழுத்தவும்
  • உங்களின் கார்டு மற்றும் பரிவர்த்தனை ஸ்லிப்பை ஞாபகமாக எடுத்துக் கொள்ளவும்.
உண்மையுடன்,
Social share:

G+1

Message plus récent Messages plus anciens Accueil

Tips

வாஸ்துப்படி வீட்டுல இந்த இடத்துல கடிகாரத்தை வைத்தால் , வீட்டில் செல்வம் குவியும்!

ஒரு வீட்டில் நாம் பிரச்சனையின்றி சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதில் வாஸ்து முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே தான் குடிப்புகும் முன், அந...

loading...