தேநீர் அல்லது காபி குடிக்கும் முன்பு ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும் என சொல்கிறார்கள் தெரியுமா?

நம்மில் பலரும் காலையில் எழுந்ததும் மேற்கொள்ளும் முதல் விஷயம் என்னவாக இருக்கும்? ஒரு கப் காபி அல்லது டீ குடிப்போம். இது உலகின் அனைத்து நாடுகளிலும் பின்பற்றப்படும் ஓர் அன்றாட பழக்கம். எப்படி பெட் காபி அல்லது டீ குடிப்பது நல்லது இல்லையோ, அதேப் போல் வெறும் வயிற்றில் காபி அல்லது டீ குடிப்பதும் நல்லதல்ல என்பது தெரியுமா?
சொல்லப்போனால் காபி அல்லது டீயை எப்போதும் குடிக்கும் முன் ஒரு டம்ளர் நீரைக் குடிக்க வேண்டும். அது அதிகாலையில் மட்டுமின்றி, எந்நேரம் குடிப்பதாக இருந்தாலும் நீரைக் குடிக்க வேண்டும்.
இக்கட்டுரையில் மும்பையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் காபி, டீக்கு முன் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று ஏன் கூறுகின்றனர் என்பது குறித்து கூறுகிறார். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
(இத்தகவல் போல்ட் ஸ்கை தமிழ் இணையத்தில் இருந்து பெறப்பட்ட்து.)
இங்கு ஏன் காபி அல்லது டீ குடிக்கும் முன்பு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 

காரணம் #1காரணம் #1

டீ அல்லது காபி குடிக்கும் முன் ஒரு டம்ளர் நீரைக் குடிக்க சொல்வதற்கு காரணம், இது வயிற்றில் அமிலங்களின் வீரியத்தைக் குறைக்கும்.
காரணம் #2

காரணம் #2

டீயில் pH அளவு 6 ஆகவும், காபியில் pH அளவு 5 ஆகவும் உள்ளது. ஆகவே பொதுவாக காபி அல்லது டீ குடிக்கும் போது, அது வயிற்றில் அசிட்டிட்டியின் அளவை அதிகரித்து, அல்சர் வரும் வாய்ப்பை அதிகரிக்கும் மற்றும் புற்றுநோய் அபாயத்தையும் அதிகரிக்கும். ஆனால் நீரைக் குடிக்கும் போது, இப்பிரச்சனை தடுக்கப்படும்.

காரணம் #3காரணம் #3

காபி அல்லது டீ குடிக்கும் முன் தண்ணீர் குடிப்பதால், இது வயிற்றில் அமிலங்களின் வீரியத்தைக் குறைத்து, வயிற்று சுவர்கள் மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதும் குறையும்.


காரணம் #4
காபி, டீ குடிப்பதற்கு முன் நீரைக் குடிப்பதால், அவற்றில் உள்ள அதிகப்படியான அமிலத்தால் பற்கள் பாதிக்கப்படுவது குறையும்.
காரணம் #5
காரணம் #5

காபி அல்லது டீ குடிக்கும் முன் நீரைக் குடிப்பதால், உடல் நீர்ச்சத்தைப் பெறுவதோடு, டாக்ஸின்களும் வெளியேற்றப்படும்.
இப்போது எப்போதெல்லாம் டீ குடிப்பது தவறு என காண்போம்.
படுக்கையில் டீ


படுக்கையில் டீ

காலையில் படுக்கையில் இருந்து எழுந்த உடனேயே டீ குடிக்கும் பழக்கம் இருந்தால், அதை உடனே மாற்றுங்கள். ஏனெனில் இப்பழக்கத்தால் வயிற்றில் அமிலங்களின் அளவு அதிகரிப்பதோடு, வாய் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு, உடலில் டாக்ஸின்களும் அதிகரிக்கும்.

உணவின் போது அல்லது உணவுக்கு பின்

உணவின் போது அல்லது உணவுக்கு பின்

டீயில் உள்ள பீனோலிக் உட்பொருட்கள் புரோட்டீன் மற்றும் இரும்புச்சத்து உறிஞ்சுவதில் இடையூறை ஏற்படுத்தும். முக்கியமாக இரும்புச்சத்து குறைபாடு அல்லது இரத்த சோகை உள்ளவர்கள், இம்மாதிரியான பழக்கத்தைக் கொண்டிருந்தால், அது நிலைமையை மேலும் மோசமாக்கும்.
தூங்கும் முன் டீ

தூங்கும் முன் டீ

இரவில் தூங்கும் முன் டீ குடித்தால், அதில் உள்ள காப்ஃபைன் தூக்கத்தில் இடையூறை ஏற்படுத்தி, இரவு தூக்கத்தை கெடுத்துவிடும்.
மாத்திரையுடன் டீ

மாத்திரையுடன் டீ

கால்சியம் அல்லது இரும்புச்சத்து மாத்திரைகளை எடுத்து வருபவர்கள், டீயுடன் அதை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது கால்சியம் மற்றும் இரும்புச்சத்து உறிஞ்சுவதைத் தடுத்துவிடும். மேலும் காலையில் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொண்டால், டீக்கு பதிலாக, ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் குடியுங்கள்.

(நன்றிபோல்ட் ஸ்கை தமிழ்)
Social share:

G+1

Message plus récent Messages plus anciens Accueil

Tips

வாஸ்துப்படி வீட்டுல இந்த இடத்துல கடிகாரத்தை வைத்தால் , வீட்டில் செல்வம் குவியும்!

ஒரு வீட்டில் நாம் பிரச்சனையின்றி சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதில் வாஸ்து முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே தான் குடிப்புகும் முன், அந...

loading...