யாரெல்லாம் மாம்பழம் சாப்பிடக்கூடாது என்று தெரியுமா?

இங்கு மாம்பழத்தை ஒருவர் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் என்ன பிரச்சனைகளை எல்லாம் சந்திக்க நேரிடும் என கொடுக்கப்பட்டுள்ளது.

கோடைக்காலம் மாம்பழ சீசன். பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் மாம்பழத்தைப் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். இருப்பினும் அதன் அலாதியான சுவையால், பலரும் அளவாக சாப்பிட முடியாமல் தவிப்பார்கள். ஏனெனில் மாம்பழத்தை ஒருவர் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.
What Happens If You Eat Too Many Mangoes?
மாம்பழத்தில் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளது. குறிப்பாக இதில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும். அதோடு இன்னும் பல்வேறு நன்மைகளையும் மாம்பழம் வாரி வழங்கும்.
இப்போது இக்கட்டுரையில் மாம்பழத்தை ஒருவர் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் என்ன பிரச்சனைகளை எல்லாம் சந்திக்க நேரிடும் என கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

எடை அதிகரிக்கும்

எடை அதிகரிக்கும்

நன்கு கனிந்த ஒரு மாம்பழத்தில் சுமார் 135 கலோரிகள் உள்ளது. ஆகவே மாம்பழத்தை அதிகம் சாப்பிட்டால், அது உடலில் கலோரிகளின் அளவை அதிகரித்து, உடல் எடையை அதிகரிக்கும். அதேப்போல் மாம்பழம் சாப்பிடும் நேரமும் முக்கியமானது. ஒருவர் உடற்பயிற்சி செய்வதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன்பே சாப்பிட்டால், உடற்பயிற்சி செய்வதற்கு தேவையான ஆற்றல் கிடைக்கும்.
இரத்த சர்க்கரை அளவு

இரத்த சர்க்கரை அளவு

மாம்பழத்தில் ஃபுருக்டோஸ் அளவு அதிகமாக உள்ளது. அது தான் மாம்பழத்திற்கு இனிப்புச் சுவையைத் தருகிறது. மாம்பழத்தை அதிகமாக சாப்பிட்டால், அது இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து, சர்க்கரை நோய் வர வழிவகுத்துவிடும்.
செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள்

செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள்

தற்போது பெரும்பாலான மாம்பழங்கள் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படுகின்றன. அதுவும் கால்சியம் கார்பைடு கொண்டு மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுகின்றன. இது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் மற்றும் சில நேரங்களில் புற்றுநோயை கூட உண்டாக்கும். எனவே தற்போதைய மாம்பழங்களை அதிகமாக சாப்பிடாதீர்கள்.
இரைப்பை குடல் பிரச்சனைகள்

இரைப்பை குடல் பிரச்சனைகள்

மாம்பழங்களை அதிகமாக சாப்பிடும் போது, குறிப்பாக பழுக்காத மாம்பழங்களை சாப்பிடும் போது, அது இரைப்பை குடல் பிரச்சனைகளான செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆகவே மாங்காயை அதிகம் சாப்பிடாதீர்கள்.
தொண்டையில் அரிப்பு அல்லது எரிச்சல்

தொண்டையில் அரிப்பு அல்லது எரிச்சல்

நன்கு கனிந்த மாம்பழங்களை ஒருவர் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது, அது தொண்டையில் அரிப்பு அல்லது எரிச்சலை உண்டாக்கும். முக்கியமாக மாம்பழம் சாப்பிட பின் குளிர்ந்த நீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
உதடு/வாய்ப் புண்

உதடு/வாய்ப் புண்

ஒரே நேரத்தில் மாம்பழத்தை அதிகமாக சாப்பிட்டால், அது வாயைச் சுற்றி, உதடு மற்றும் நாக்கு நுனிகளில் புண் அல்லது வெடிப்புக்களை உண்டாக்கும்.
சாப்பிடக்கூடாதவர்கள்

சாப்பிடக்கூடாதவர்கள்

ஆர்த்ரிடிஸ், சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் ஒரு நாளைக்கு ஒரு சிறிய அளவிலான மாம்பழத்திற்கு மேல் சாப்பிடக்கூடாது. அதிலும் மாம்பழம் மட்டுமின்றி, மாங்காயையும் தான் அளவாக சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் நிலைமை மோசமாகும்.
மாம்பழ ஜூஸ்

மாம்பழ ஜூஸ்

மாம்பழங்களை அப்படியே சாப்பிடாமல், ஜூஸ் வடிவில் குடிப்பது நல்லதல்ல. ஏனெனில் மாம்பழங்களைக் கொண்டு ஜூஸ் தயாரிக்கும் போது, அதில் உள்ள நார்ச்சத்து முழுமையாக நீக்கப்பட்டு, நன்மைக்கு பதிலாக தீமையையே உண்டாக்கும். மேலும் மாம்பழத்தைக் கொண்டு ஜூஸ் தயாரிக்கும் போது, அதில் தீங்கு விளைவிக்கும் சர்க்கரையை சுவைக்காக சேர்ப்பதால், இன்னும் தீங்கான ஒன்றாகிவிடுகிறது.
அலர்ஜி

அலர்ஜி

சிலருக்கு மாம்பழம் அலர்ஜியை ஏற்படுத்தும். ஒவ்வொருவருக்கும் அலர்ஜிக்கான அறிகுறிகள் வேறுபடும். அதில் கண்களில் இருந்து நீர் வடிதல், மூக்கு ஒழுகல், சுவாச பிரச்சனை, அடிவயிற்று வலி, தும்மல் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
நன்றி: போல்ட் ஸ்கை
Social share:

G+1

Message plus récent Messages plus anciens Accueil

Tips

வாஸ்துப்படி வீட்டுல இந்த இடத்துல கடிகாரத்தை வைத்தால் , வீட்டில் செல்வம் குவியும்!

ஒரு வீட்டில் நாம் பிரச்சனையின்றி சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதில் வாஸ்து முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே தான் குடிப்புகும் முன், அந...

loading...