ஒரு நாளைக்கு எத்தனை தடவை முகம் கழுவலாம்?

நம் முகத்தை பராமரிக்க எளிதான வழி அல்லது பெரும்பாலானோர் கடைபிடிப்பது முகத்தை கழுவுவது.
அதிலும் பலர் உருவாக்கி வைத்திருக்கும் கட்டுக்கதைகளையும் உண்மை நிலமையையும் பார்க்கலாம்.
1. வெயிலில் சென்று வரும்போதெல்லாம் முகத்தை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
உண்மை : முகத்தை சோப்பு போட்டு கழுவும் போது, அவை முகத்தில் உள்ள வியர்வையையும், அழுக்கை மட்டும்
நீக்குவதல்ல அதோடு, முகப்பொலிவிற்கு தேவையானதும் இயற்கையாகவே நம் தோலில் உள்ள லிபிட்ஸையும் நீக்கிவிடும்.
அதோடு தோலில் வறட்சி ஏற்ப்பட்டு மற்ற கோளாறுகள் ஏற்படும்.
ஒரு நாளைக்கு இரண்டு முறை முகத்திற்கு சோப்பு போட்டு குளித்தால் போதுமானது.
2.எத்தகைய மேக்கப் போட்டிருந்தாலும் முகம் கழுவினால் அவை போய்விடும்.
உண்மை : முற்றிலும் தவறான கருத்து இது. மேக்கப் முழுவதையும் ரிமூவ் செய்த
பின்னரே முகத்தை கழுவ வேண்டும். இதற்கென சந்தைகளில் கிடைக்கும் மேக்கப் ரிமூவர்களை இதற்கென பயன்படுத்தலாம்.
6 common face washing myths
3. நீண்ட நேரம் நன்றாக தேய்த்து கழுவினால் தான் அழுக்கு போகும் .
உண்மை : அப்படி ஒன்றும் தேவையில்லை. நீண்ட நேரம் தேய்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.முகம் முழுவதும்
பரவும் வண்ணம் லேசாக சோப்பைத் தேய்த்து கழுவினாலே போதும்.
4. மாறுப்பட்ட வெப்ப நிலைகளில் முகத்தை கழுவினால் முகம் ப்ரஷாக இருக்கும்.
உண்மை : நார்மலாக இருக்கும் டெம்ப்பரேச்சரை விட அதிக சூடாகவோ
அல்லது அதிக குளிரான நீரைக்கொண்டு முகத்தைக் கழுவுவதால் அந்நேரத்திற்கான கிளர்ச்சி ஏற்படுமே ஒழிய பொலிவு எல்லாம் ஏற்படாது.
6 common face washing myths
5.முகதுவாரத்தில் உள்ள அழுக்கை நீக்க சூடான நீரில் முகம் கழுவ வேண்டும்.அப்போது முக துவாரம் விரிந்து அழுக்குகள் வெளியேறும்.
உண்மை : முக துவாரம் என்பது திறந்து மூடும் கதவல்ல. நம் முகத்தில் மேலும் மேலும் அழுக்கு சேராது தவிர்க்கவே முகத்தை கழுவுகிறோம்.
6.கையை விட பிரஷைக்கொண்டு முகத்தைக் கழுவினால் முகத்தில் உள்ள அழுக்கு விரைவில் நீங்கும்.
உண்மை : பிரஷ் பயன்படுத்துவது தவறல்ல ஆனால் அடிக்கடி பயன்படுத்த தேவையில்லை. அதோடு, அந்த பிரஷை சுத்தமாக காற்றோட்டமுடன் வைத்திருக்க வேண்டும்.
இல்லையென்றால் அந்த பிரஷ் மூலமாகவே முகத்திற்கு பாதிப்புகள் ஏற்படலாம்.
6 common face washing myths
இவை எல்லாவற்றையும் விட முகம் கழுவுவதற்கு முன்னால் நம் கைகளும், முகத்தை துடைக்க பயன்படுத்தும் துண்டும் சுத்தமானதாக இருக்கிறதா என்பதை ஒரு முறை உறுதி செய்து கொள்ளுங்கள்.
Social share:

G+1

0 Response to "ஒரு நாளைக்கு எத்தனை தடவை முகம் கழுவலாம்?"

Message plus récent Messages plus anciens Accueil

Tips

வாஸ்துப்படி வீட்டுல இந்த இடத்துல கடிகாரத்தை வைத்தால் , வீட்டில் செல்வம் குவியும்!

ஒரு வீட்டில் நாம் பிரச்சனையின்றி சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதில் வாஸ்து முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே தான் குடிப்புகும் முன், அந...

loading...