வாஸ்து என்பது அறிவியல் அடிப்படையிலானது. நிபுணர்கள் வாஸ்து சாஸ்திரப்படி வீட்டை அமைப்பது மனிதனின் வாழ்வை மேம்படுத்தும் என தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு வாஸ்து அறிவுரையின் பின்னாலும் ஒரு அறிவியல் பூர்வமான உண்மை உள்ளது. நீங்கள் நம்பினாலும், நாம்பாவிட்டாலும் வாஸ்து சாஸ்திரம் அதன் பலன்களை நிச்சயம் வெளிப்படுத்தும். இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள சில சின்ன சின்ன மாற்றங்களை உங்களது வீட்டில் செய்வதன் மூலம் அமைதியான, சந்தோஷமான வாழ்க்கையை நீங்கள் பெற முடியும்.
1. விநாயகர்

1. விநாயகர்

வீட்டின் நுழைவாயில் சுவற்றில் எதுவுமே இல்லாமல் இருக்க கூடாது. அது தனிமையை உணர செய்யும். ஏதேனும் ஒரு சிலை அல்லது விநாயகர் படத்தை மாட்டி வைக்கலாம்.
2. ஹானுமான்

2. ஹானுமான்

உங்களது வீடு அல்லது கட்டிடம் தவறான திசையில் கட்டப்பட்டிருந்தால், வீட்டில் பஞ்சமுகி ஹானுமான் புகைப்படத்தை வைக்கலாம்.
3. தியானம்

3. தியானம்

வட கிழக்கு திசையை நோக்கி தியானம் செய்வது சிறந்தது. இந்த திசை நோக்கி தியானம் செய்வதால் தெய்வீக எண்ணங்கள் மேம்படும்.
4. சாலையின் புகைப்படம்

4. சாலையின் புகைப்படம்

நல்ல பார்வை மற்றும் திட்டமிட்டு செயல்படும் திறன் மேம்பட, நீளமான சாலை இருப்பது போன்ற புகைப்படத்தை வடமேற்கு திசையில் வைக்கலாம்.
5. குடும்ப புகைப்படங்கள்

5. குடும்ப புகைப்படங்கள்

உங்களது குடும்ப புகைப்படங்களை மஞ்சள் அல்லது தங்க நிற பிரேம் போட்டு தென் மேற்கு திசையில் வைக்கலாம். இது ஆரோக்கியமான உறவுகள் நீடிக்க உதவும்.
6. சூரியன் உதயம்

6. சூரியன் உதயம்

சூரியன் உதயமாவது போன்று உள்ள புகைப்படம் அல்லது பெயிண்டிங்கை கிழக்கு பக்கமாக வைத்தால், சமூகத்துடன் ஆன உறவுகள் மேம்படும்.
7. படிக்கும் மேஜை

7. படிக்கும் மேஜை

குழந்தைகள் அமர்ந்து படிக்கும் மேஜையை கிழக்கு பார்த்தது போல வைப்பதால், குழந்தைகளின் கல்வியில் வளர்ச்சி அதிகரிக்கும்.
8. கதவு, ஜன்னல்கள்

8. கதவு, ஜன்னல்கள்

வீட்டில் உள்ள கதவுகள் மற்றும் ஜன்னல்களின் எண்ணிக்கை இரட்டைப்படை எண்களில் இருக்க வேண்டும்.
9. குதிரை

9. குதிரை

குதிரை ஓடுவது போன்ற புகைப்படத்தை தெற்கு பக்கமாக வைப்பது வீட்டில் செல்வம் மற்றும் மகிழ்ச்சியை தக்க வைக்க உதவும்.
10. மெத்தை

10. மெத்தை

கணவன் மனைவி இருவரும் ஒரே மெத்தையை தான் பயன்படுத்த வேண்டும். மனைவி கணவனுக்கு இடதுபுறமாக தான் படுத்து உறங்க வேண்டும்.
11. தேவையில்லாத பொருட்கள்

11. தேவையில்லாத பொருட்கள்

தேவையில்லாத பொருட்களை வீட்டில் வைத்திருக்க கூடாது. முக்கியமாக கட்டிலின் அடிப்பகுதியில் தேவையற்ற கனமான பொருட்களை போட்டு வைக்க கூடாது. இது பழைய தேவையற்ற நினைவுகளை நியாபகப்படுத்தும்.
12. படுக்கை

12. படுக்கை

படுக்கை அறை இருள் சூழ்ந்திருக்க கூடாது. படுக்கை அறைக்கு எப்போதுமே லைட்டான வண்ணங்களில் தான் பெயிண்ட் பூச வேண்டும். லைட் கலர்கள் மன நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தரும்.
13. மெழுகுவர்த்தி

13. மெழுகுவர்த்தி

படுக்கை அறையில் மெழுகுவர்த்தி மற்றும் இயற்கை தாவரங்களை வைப்பதன் மூலம் எதிர்மறையான சிந்தனைகளில் இருந்து விடுபடமுடியும்.
14. சமையலறை

14. சமையலறை

சமையலறை வீட்டின் முக்கியமான பகுதியாகும். இது உறவுகளை குறிக்கிறது. கேஸ் மற்றும் பாத்திரம் கழுவும் சிங்க்கிற்கும் இடையே போதுமான அளவு இடைவெளி விட வேண்டியது அவசியம்.
15. படுக்கை அறை

15. படுக்கை அறை

படுக்கை அறை தென்-மேற்காக இருந்தால் உறவு மேம்படும். மகிழ்ச்சி போங்கும்.
16. மீன் தொட்டி

16. மீன் தொட்டி

மீன் தொட்டியை உங்களது வீட்டின் வட கிழக்கு திசையில் வைத்தால், எதிர்மறை எண்ணங்கள் எல்லாம் விலகும்.
17. செடிகள்

17. செடிகள்

பசுமையான செடிகளை கிழக்கு பக்கம் பார்த்து வைப்பதால், உறவுகள் ஆரோக்கியமாக இருக்கும்.
Social share:

G+1

0 Response to " "

Message plus récent Messages plus anciens Accueil

Tips

வாஸ்துப்படி வீட்டுல இந்த இடத்துல கடிகாரத்தை வைத்தால் , வீட்டில் செல்வம் குவியும்!

ஒரு வீட்டில் நாம் பிரச்சனையின்றி சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதில் வாஸ்து முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே தான் குடிப்புகும் முன், அந...

loading...