மாதுளம் பழம் சாப்பிட்டா போதும் புற்றுநோயை வராமல் தடுக்க முடியும்!!!

இன்றைக்கு இருக்கும் மிகப்பெரிய அச்சுற்றுத்தும் நோய்களில் ஒன்று புற்றுநோய். புற்றுநோய் என்று சொன்னாலே பலரும் பதறியடித்து ஓடுகிறார்கள் அதற்கு காரணம் இன்னும் புற்றுநோயை குணப்படுத்த எந்த மருந்துகளும் இல்லை.
புற்றுநோய் தாக்கினால் எடுத்துக் கொள்ளும் சிகிச்சை முறைகள் எல்லாம் மனிதரை உருக்கிப் போட்டுவிடும். புற்றுநோய் வராமல் தடுக்கும் மருந்துகளை இன்றும் தேடித்தேடி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இன்றளவும் புற்றுநோய் குறித்த ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. நிச்சயம் நல்ல விடியல் பிறக்கும்,புற்று நோய் பாதிப்பு வராமல் தடுக்க முன்னெச்செரிக்க நடவடிக்கையாக என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் தேடித் தேடி படித்திருப்போம்.


How pomegranate helps to prevent cancer
ஆனால் புற்றுநோயைப் போக்குவதில், அந்த நோய் வராமல் தடுப்பதில் ஒரு பழம் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. அடிக்கடி பயன்படுத்தும் அந்தப் பழத்தில் இன்னும் வேறென்ன சத்துக்கள் எல்லாம் இருக்கிறது புற்றுநோயை எப்படி வராமல் தடுக்கும் என தெரிந்து கொள்ளலாம்.


 மாதுளம் பழம் : மாதுளம் பழம் :

இங்கே மிகவும் பிரபலமான பழங்களில் ஒன்று மாதுளம்பழம். இரான் மற்றும் இந்தியாவில் தான் இந்தப்பழம் பயிரிடப்படுகிறது. மாதுளம்பழத்துக்கு அயல்நாடுகளில் இன்னொரு பெயர் உண்டு... `சைனீஸ் ஆப்பிள்.' பழங்களிலேயே பழமையானது, சிறந்தது மாதுளம்பழம்தான். உலகெங்கும் 720 வகை மாதுளைகள் உள்ளன. நீண்டநாள் உடல்நிலை சரியில்லாதவர்கள், தொடர்ந்து ஒரு மாதம் இந்தப் பழத்தைச் சாப்பிட்டுவந்தால், உடலுக்குப் பழைய தெம்பு கிடைத்துவிடும். மருத்துவக் குணங்களும் அழகை அள்ளித்தரும் குணங்களையும்கொண்டது.


பாஸ்பரஸ் : பாஸ்பரஸ் :

மாதுளம் பழத்தில் பாஸ்பரஸ் 70மி.கி. உள்ளது. கால்சியம்,இரும்பு ஆகிய தாது பொருட்கள், வைட்டமின்கள் பி,சி ஆகியவை சிறிதள்வு உள்ளன. கால்சியம் உடலில் சேருவதற்கு பாஸ்பரஸ் உதவி புரிகிறது.


பாலிபினால் : பாலிபினால் :

மாதுளம்பழத்தில் அதிகப்படியான பாலிபினால் இருக்கிறது. இதனால் மாதுளம்பழம் சிறந்த ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் ஆகவும் செயல்படுகிறது. உடலில் தேவையின்றி தங்கிடும் டாக்ஸிங்களை நீக்குவதில் முதலிடம் வகிக்கிறது.
தேவையற்ற டாக்ஸின்களை அகற்றுவதன் மூலம் செல் வளர்ச்சியில் முக்கியப் பங்க்காற்றுகிறது. புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் தடுத்திடும்.


விட்டமின் : விட்டமின் :

மாதுளம் பழத்தில் அதிகப்படியான விட்டமின் சி இருக்கிறது. இதனால் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தினமும் ஒரு மாதுளம் பழம் சாப்பிடலாம். நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் செல் வளர்ச்சியில் மாற்றம் இருக்காது.புற்றுநோய் கிருமிகள் உருவாகாமல் தடுத்திடும்.


ஆராய்ச்சி : ஆராய்ச்சி :

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் மாதுளம்பழத்தில் எல்லாகாடானின்ஸ(ellagitannins) இருப்பது உறுதி செய்யப்படுகிறது. இந்த சத்து இருப்பதால் புற்றுநோய் செல் வளர்ச்சியை தடுத்திடும் என்கிறார்கள். அதோடு புற்றுநோய் தாக்கியிருந்தால் கூட அது மேலும் பரவாமல் தடுக்க முடியும். புற்றுநோயாளிகளுக்கு ஆகச் சிறந்த மருந்து என்று கூட சொல்லலாம்.


ஆண்ட்டி ட்யூமர் : ஆண்ட்டி ட்யூமர் :

மாதுளம் பழத்தில் இருக்கும் டேனின் மற்றும் ஆன்தோசியானின்ஸ் ஆண்ட்டி ட்யூமராக செயல்படுகிறது. செல்களின் வளர்ச்சியில் அதற்கு தேவையான சத்துக்களை அளிப்பதில் மாதுளம்பழம் முக்கிய பங்காற்றுகிறது.
அதே போல புது செல்கள் உற்பத்தியாவதற்கும் வழிவகை செய்கிறது. நல்ல செல்கள் உற்பத்தியாவதால் நோய் பாதித்த செல்கள் பல்கிப் பெருகுவது குறைந்திடும்.


நோய் எதிர்ப்பு சக்தி : நோய் எதிர்ப்பு சக்தி :

மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. மாதுளம்பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன.மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது.


ரத்தம் அதிகரிக்கும் : ரத்தம் அதிகரிக்கும் :

மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை உணவுக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய ரத்தம் உற்பத்தியாகி விடும். மாதுளம்பூக்களை மருந்தாகப் பயன்படுத்தும் போது, இரத்த வாந்தி, இரத்த மூலம் வயிற்றுக் கடுப்பு, உடல் சூடு தணியும்.
இரத்தம் சுத்தியடையும், இரத்த விருத்தி உண்டாகும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.


வயிற்றுப் புண் : வயிற்றுப் புண் :

மாதுளம் மரப்பட்டை அல்லது வேர்ப்பட்டையை வெட்டி பச்சையாக இருக்கும்போதே இதன் எடைக்கு எட்டு மடங்கு தண்ணீர் சேர்த்து பாதியாகச் சுண்டக் காய்ச்சியதை, காலை நேரத்தில் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள தட்டைப் பூச்சிகள் மலத்துடன் வெளியேறி விடும்.


விஷம் : விஷம் :

மாதுளம் பூக்கள் அருகம்புல், மிளகு, சீரகம் அதிமதுரம். சமமாகச் சேர்த்து கஷாயம் தயாரித்துக் கொண்டு, வேளைக்கு 30மில்லி எடுத்து இதில் பசு வெண்ணெய் சேர்த்துக் கலக்கித் தொடர்ந்துசாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மை நீங்கும்.


உடல் சோர்வு : உடல் சோர்வு :

மாதுளம் பழச் சாறு குடிப்பது கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தி உடனே நிற்க பயன் விளைவிக்கும். கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு இரத்த சோகையும் ஏற்படக் கூடும். இதற்கும் மாதுளம் பழச் சாறு உகந்தது. நோய்வாய்ப்பட்ட பின்னர் ஏற்படும் உடல் சோர்வைப் போக்க மாதுளம் பழச் சாறுடன் சிறிதளவு கல்கண்டு சேர்த்து சாப்பிட்டு குணம் பெறமுடியும்.


வலி தீர : வலி தீர :

மாதுளை பூச்சாறு 15 மிலி சிறிதளவு கற்கண்டு சேர்த்து காலையில் மட்டும் குடித்து வர வேண்டும். 2 வாரங்கள் தொடர்ந்து செய்து வர இரத்த மூலம் கட்டுப்படும்.
ஒரு டம்ளர் அளவு பழச்சாற்றை தேவையான அளவு கற்கண்டு சேர்த்து காலையில் குடிக்க உடல் குளிர்ச்சி பெறும்.
மாதுளம் பூக்களைச் சேகரித்து உலர்த்தி தூள் செய்து வைத்துக் கொள்ளலாம். இதனை ½ தேக்கரண்டி அளவு ¼ டம்ளர் தண்ணீரில் இட்டுக் கொதிக்க வைத்து, வடிகட்டி வாய் கொப்பளித்து வர வாய்ப்புண், தொண்டை இரணம், வலி தீரும்.


பற்கள் : பற்கள் :

பல்லுக்கு உதாரணமாக மாதுளை விதைகளைக் கூறுவார்கள். நன்கு முற்றிய மாதுளம் பழத்தை உடைத்தாலே உள்ளே முத்துப் பற்கள் போன்று அழகாக அடுக்கி வைக்கப்பட்டிக்கும் விதைகள் அனைவரையும் அதிசயிக்க வைக்கும். பற்களையும், ஈறுகளையும், பாதுகாக்க மாதுளம் பழம் சாப்பிடுவது மிகவும் அவசியமாகும்.


கருப்பை கோளாறுகள் :

கருப்பை கோளாறுகள் : கருப்பை கோளாறுகளை குணப்படுத்துவதில் மாதுளம் பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. மாதுளம் பூவுடன் சம அளவு வால் மிளகு, சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து வறுத்து பொடியாக்கிக் கொள்ளுங்கள். தினமும் காலை மாலை என இருவேலை சாப்பிட்டு வந்தால் கருப்பை தொடர்பான எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.


                                                                                          நன்றிதமிழ் போல்ட் ஸ்கை. 
Social share:

G+1

0 Response to "மாதுளம் பழம் சாப்பிட்டா போதும் புற்றுநோயை வராமல் தடுக்க முடியும்!!!"

Message plus récent Messages plus anciens Accueil
loading...