மாயம் செய்யும் மாவிலை தேநீர்

இந்து சமய திருவிழாக்கள், இல்லங்களில் நடக்கும் திருமணம் போன்ற பெருமளவில் மக்கள் கூடும் சுப நாட்களில் வீடுகளில் மாவிலைத் தோரணம் கட்டுவது வழக்கம். இது வெறும் சமய சடங்கு மட்டுமின்றி இதற்கு அறிவியல் பின்னணியும் உள்ளது மாவிலைகள் மரத்திலிருந்து பறித்த பின்னரும் ஆக்சிஜனை வெளியிடும் தன்மை கொண்டது,ஆகவே மாவிலை தோரணங்கள் கட்டுவதால் பெருமளவில் மக்கள் கூடும் ஏற்படும் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்கமுடியும் மேலும் மாவிலைகள் சிறந்த கிருமி நாசினியாகவும், வியாதி எதிர்ப்பு சக்தி மிக்க மூலிகையாகவும் பயன்தருகின்றன.
மா மரத்தின் இலை, மலர்கள், காய், கனி, வேர்ப் பட்டை மற்றும் பிசின் உள்ளிட்ட அத்தனை பாகங்களும், மனிதர்களின் உடல் நலனுக்கு அரிய தீர்வாகிறது. பயன் தரும் மா மரத்தின் முக்கியமான ஒரு அங்கமாக விளங்கும் மாவிலையில் தயாரிக்கப்படும் டீ பல்வேறு நோய் தீர்க்கும் மருந்தாக செயல்படுகிறது!
                                       

மாவிலை டீ செய்முறை
தேவையான பொருட்கள்:
சுத்தமான மாவிலை – 4 – 5 இலைகள்
சுத்தமான தேன் – தேவையான அளவு
ஏலக்காய் – 2
செய்முறை:
சுத்தமான மாவிலையை நீரில் போட்டு கொதிக்க விட வேண்டும்
பின்னர் அந்த நீரை வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
கொய்யா இலை வாசனை பிடிக்காதவர்கள் ஏலக்காய் சேர்த்து கொதிக்க விட்டு குடிக்கலாம்.
பயன்கள்:
இரத்தக் குழாய் அடைப்புகளால் உண்டாகும் “வெரிகோஸ் வெயின்” எனும் நரம்பு சுருட்டல் வியாதிகளை போக்கி, இரத்த அழுத்த குறைபாடுகளை சரி செய்யக் கூடியது.
மாவிலைத் டீ இரத்த அணுக்களை வலுவூட்டி, இரத்த ஓட்டத்தை சீராக்கும் வல்லமை மிக்கது.
உடலில் தேங்கியிருக்கும் நச்சுப் பொருட்களை வெளியேற்றி, மனிதர்களின் பரம்பரைத் தன்மையை பாதுகாக்கும் குணமுடையது.
மாவிலைத் தேநீர் உடலின் முக்கிய அணுக்களான DNA தொகுப்பை பல்வேறு பாதிப்புகளில் இருந்து காக்கும் திறன் மிக்கது.
மாவிலைத் தேநீர் மன ரீதியான பாதிப்புகளுக்கு சிறந்த நிவாரணம் அளிக்க வல்லவை.
மாவிலைத் தேநீரை தினமும் பருகி வர, மாலைக் கண் போன்ற கண் பார்வைக் குறைபாடுகள் அகலும்.
Social share:

G+1

0 Response to "மாயம் செய்யும் மாவிலை தேநீர்"

Message plus récent Messages plus anciens Accueil

Tips

வாஸ்துப்படி வீட்டுல இந்த இடத்துல கடிகாரத்தை வைத்தால் , வீட்டில் செல்வம் குவியும்!

ஒரு வீட்டில் நாம் பிரச்சனையின்றி சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதில் வாஸ்து முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே தான் குடிப்புகும் முன், அந...

loading...