உங்களுக்கு இந்த கை ரேகைகள் இருக்காணு பாருங்க: பணக்காரராகும் வாய்ப்புள்ளதாம்...!!!

யாருக்கு தான் பணக்காரர் ஆக வேண்டுமென்ற ஆசை இருக்காது. உலகில் உள்ள ஒவ்வொருவரும் கடுமையாக வேலை செய்வது எதற்காக? கஷ்டமின்றி சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்கு தானே. அதற்கு தானே நாள் முழுவதும் அயராது உழைத்து, பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறோம்.
Palmistry: If You Have These Lines On Your Palm, Then You Will Become Rich And Prosperous!
சிலருக்கு அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு வரும். இதனால் திடீரென்று வீடு, கார் என்று வாங்கி திடீர் பணக்காரர் ஆகிவிடுவார்கள். இதற்கு அவர்கள் செய்த புண்ணியம் மட்டுமின்றி, அவர்களது கையில் உள்ள ரேகைகளும் தான்.
கைரேகை ஜோதிடத்தின் படி, கையில் உள்ள ஒருசில ரேகைகள் நாம் பணக்காரர் ஆகும் வாய்ப்புள்ளதா என்பதைக் கூறுமாம். இக்கட்டுரையில் அந்த ரேகைகள் குறித்து தான் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த ரேகைகள் ஒருவரது கையில் இருந்தால், அவர்கள் வாழ்வில் ஒருநாள் நிச்சயம் பணக்காரர் ஆகிவிடுவார்களாம். சரி, அந்த ரேகைகள் எவையென்று பார்ப்போமா....
நேரான ரேகை

நேரான ரேகை

உங்கள் உள்ளங்கையில் உள்ள கோடுகள் பெரும்பாலும் அபாயகரமானவையாக இருப்பதை நீங்கள் காண்பீர்கள். ஆனால், இந்த கோடுகளில் ஒரு நேர்க்கோட்டை நீங்கள் பார்த்தால், நீங்கள் வாழ்க்கையில் மிகவும் பணக்காரராக இருப்பீர்கள் என்று அர்த்தம்.
மேடுகள்

மேடுகள்

கையில் உள்ள மேடுகளான வீனஸ் மற்றும் சனி மேடுகள் சற்று மேலே எழுந்து காணப்பட்டால், அவர்கள் வாழ்வில் எதிலும் வெற்றி காண்பதோடு, செல்வந்தர் ஆகும் வாய்ப்பும் உள்ளது என்று அர்த்தம்.
ஆமை குறி

ஆமை குறி

உங்கள் உள்ளங்கையில் ஆமை வடிவக் குறி இருந்தால், அது பணக்காரர் ஆகும் வாய்ப்பு இருப்பதையும், எதிலும் வெற்றியை அடைவார் என்பதையும் குறிக்கும்.
ஸ்வஸ்திக்

ஸ்வஸ்திக்

ஒருவரது கையில் ஸ்வஸ்திக் சின்னம் இருந்தால், அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாவர். மேலும் இது அவர்களை நோக்கி செல்வத்தை ஈர்ப்பதோடு, பணியில் வெற்றியாளராக இருக்கச் செய்யும்.
வெள்ளை மச்சம்

வெள்ளை மச்சம்

உங்கள் உள்ளங்கையில் வெள்ளை நிறத்தில் மச்சம் இருந்தால், அதுவும் அவர்களது அதிர்ஷ்டத்தை தான் குறிக்கிறதாம். அதுவும் இந்த மாதிரியான மச்சம் கொண்டவர்கள் பணக்காரர் ஆகும் வாய்ப்பு நிறைய உள்ளதாம்.
ரேகைகள்

ரேகைகள்

உங்கள் உள்ளங்கையில் உள்ள அனைத்து ரேகைகளும் சற்று உயர்ந்து இருப்பதோடு, அவற்றின் வரிகள் சுத்தமானவையாகவும், நடுவில் உடைக்கப்படாமலும் இருந்தால், நீங்கள் வாழ்க்கையில் மிகவும் வெற்றிகரமாக இருப்பீர்கள் என்று அர்த்தம்.
2 விதி ரேகைகள்

2 விதி ரேகைகள்

உங்கள் கையில் விதி ரேகைகள் இரண்டு இருந்து, அவை இரண்டும் இணையாக இருந்தால், அது நீங்கள் வாழ்க்கையில் மிகவும் அதிர்ஷ்டசாலி என்றும், நீங்கள் நிறைய பணம் சம்பாதிப்பீர்கள் என்றும் அர்த்தம்.
சனி மேடு

சனி மேடு

உங்கள் சனி மேட்டில் சக்கர அடையாளம் இருந்தால், நீங்கள் வாழ்க்கையில் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று அர்த்தம். அதாவது இது உங்கள் வாழ்நாளில் நிறைய பணம் சம்பாதிப்பீர்கள் என்பதைக் குறிக்கிறது.
அதிர்ஷ்ட ரேகை

அதிர்ஷ்ட ரேகை

உங்கள் அதிர்ஷ்ட ரேகை மணிக்கட்டு வரை நீட்டிக்கப்பட்டிருந்தால், நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று அர்த்தம். நீங்கள் நிறைய பணம் மற்றும் நண்பர்களைப் பெறுவீர்கள் மற்றும் வாழ்க்கையில் மிகவும் வெற்றிகரமானவராக இருப்பீர்கள் என்று அர்த்தம்.
வெற்றிகரமான மக்கள்

வெற்றிகரமான மக்கள்

இப்போது நீங்கள் வாழ்க்கையில் வெற்றிகரமாக இருப்பீர்களா இல்லையா என்பதை உங்களுக்கு சொல்லும் அறிகுறிகள் பற்றி பார்ப்போம். உங்கள் உள்ளங்கையில் இந்த ரேகைகள் இருந்தால், நீங்கள் மிகவும் பிரபலமாக இருப்பீர்கள் என்று அர்த்தம்.
விதி ரேகையின் முக்கியத்துவம்

விதி ரேகையின் முக்கியத்துவம்

ஒவ்வொருவரும் தங்களது சொந்த அதிர்ஷ்டத்தை உலகிற்கு கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அதுவும் பெரும்பாலும் கையில் உள்ள ரேகைகளால் அவை வரையறுக்கப்படுகிறது.
அதிர்ஷ்ட ரேகை

அதிர்ஷ்ட ரேகை

உங்கள் கையில் உள்ள விதி ரேகை வழக்கத்தை விட நீளமாக இருந்தால், அது நீங்கள் வாழ்க்கையில் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று அர்த்தம். மேலும் நீங்கள் உங்களது அனைத்து இலக்குகளையும் அடைந்து வெற்றிகரமானவராக இருப்பீர்கள் என்பதையும் அந்த ரேகை குறிக்கும்.
ஆள்காட்டி விரல்

ஆள்காட்டி விரல்

உங்களது விதி ரேகை சனி மேடு வரை நீட்டிக்கப்பட்டு, மீண்டும் ஆள்காட்டி விரல் வரை இணைக்கப்பட்டிருந்தால், அது நீங்கள் வாழ்வில் வெற்றிகரமானவராக இருப்பீர்கள் என்று அர்த்தம். மேலும் இத்தகையவர்களின் கனவுகள் அனைத்தும் நிறைவேறும்.
பெருவிரல் ரேகை

பெருவிரல் ரேகை

பெருவிரலின் அடிப்பகுதியில் இருந்து தொடங்கி, சனி மேடு வரை ரேகை சென்றால், நீங்கள் வாழ்க்கையில் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று அர்த்தம்.
உள்ளங்கை

உள்ளங்கை

உள்ளங்கையில் இருந்து ரேகை ஏதேனும் தொடங்கினால், அத்தகையவர்கள் திடீர் பணக்காரர் ஆகும் வாய்ப்புள்ளது என்று அர்த்தம். மேலும் இத்தகையவர்கள் வாழ்க்கையில் மிகவும் அதிர்ஷ்டசாலியாகவும் இருப்பர்.
விதி ரேகை பிளவு

விதி ரேகை பிளவு

உங்கள் சனி மேட்டிற்கு அருகே விதி ரேகையில் பிளவு ஏற்பட்டிருந்தால், நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி மற்றும் உங்களுக்கு எதிலும் வெற்றி கிட்டும் என்று அர்த்தம்.

Thanks: போல்ட்ஸ்கை
Social share:

G+1

0 Response to "உங்களுக்கு இந்த கை ரேகைகள் இருக்காணு பாருங்க: பணக்காரராகும் வாய்ப்புள்ளதாம்...!!!"

Message plus récent Messages plus anciens Accueil

Tips

வாஸ்துப்படி வீட்டுல இந்த இடத்துல கடிகாரத்தை வைத்தால் , வீட்டில் செல்வம் குவியும்!

ஒரு வீட்டில் நாம் பிரச்சனையின்றி சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதில் வாஸ்து முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே தான் குடிப்புகும் முன், அந...

loading...