ஒரு வாகனம் வாங்கும்போது எச்சரிக்கை அவசியம்- முழுமையாக படிக்கவும்

காரை விற்பனை செய்த இன்ஜினியர் ஒருவரே, டூப்ளிகேட் சாவியை பயன்படுத்தி, அந்த காரை திருடி சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில், அந்த இன்ஜினியரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்த விரிவான தகவல்களையும், செகண்ட் ஹேண்டில் வாகனம் வாங்கும்போது எப்படி எச்சரிக்கையாக இருப்பது? என்பது குறித்த தகவல்களையும் பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.
காரை விற்பது போல் விற்று திருடிய இன்ஜினியர்.. செகண்ட் ஹேண்டு வாகனம் வாங்கும்போது எச்சரிக்கை அவசியம்
உத்தரபிரதேச மாநிலம் காஸியாபாத் பகுதியை சேர்ந்தவர் சர்ப்ராசுதீன். சிற்பி. இவர் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம், மனோஜ் சிங்கால் என்பவரிடம் இருந்து ஆடி ஏ6 செடான் காரை விலைக்கு வாங்கினார். காரின் விலை 17.5 லட்சம் என முடிவு செய்து கொள்ளப்பட்டது.
காரை விற்பது போல் விற்று திருடிய இன்ஜினியர்.. செகண்ட் ஹேண்டு வாகனம் வாங்கும்போது எச்சரிக்கை அவசியம்
இதற்காக முதல் கட்டமாக 50,000 ரூபாயை மனோஜ் சிங்காலிடம், சிற்பியான சர்ப்ராசுதீன் வழங்கி விட்டார். அதன்பின் காரையும் சர்ப்ராசுதீன் எடுத்து கொண்டு சென்று விட்டார். எஞ்சிய பணத்தை தவணை முறையில் செலுத்துவது என இருவருக்கும் இடையே ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
காரை விற்பது போல் விற்று திருடிய இன்ஜினியர்.. செகண்ட் ஹேண்டு வாகனம் வாங்கும்போது எச்சரிக்கை அவசியம்
இதன்படி மனோஜ் சிங்காலுக்கு, 14 லட்ச ரூபாயை இன்டர்நெட் பேங்கிங் மூலமாக, சர்ப்ராசுதீன் அனுப்பினார். ஆனால் 14.5 லட்சம் செலுத்தியும் கூட, சர்ப்பராசுதீன் பெயருக்கு காரின் ஆர்சி புத்தகத்தை மனோஜ் சிங்கால் மாற்றி தரவில்லை. முழு பணமும் செலுத்திய பின்புதான் பெயரை மாற்றி தர முடியும் என மனோஜ் சிங்கால் கூறியுள்ளார்.
காரை விற்பது போல் விற்று திருடிய இன்ஜினியர்.. செகண்ட் ஹேண்டு வாகனம் வாங்கும்போது எச்சரிக்கை அவசியம்
இதனிடையே மனோஜ் சிங்காலுக்கு ரூ.3 லட்சத்தை மட்டும் சர்ப்ராசுதீன் பாக்கி வைத்திருந்தார். அந்த பணத்தை வாங்குவதற்காக, டெல்லியில் உள்ள தேசிய விலங்கியல் பூங்காவிற்கு சர்ப்ராசுதீனை, மனோஜ் சிங்கால் அழைத்திருந்தார்.
காரை விற்பது போல் விற்று திருடிய இன்ஜினியர்.. செகண்ட் ஹேண்டு வாகனம் வாங்கும்போது எச்சரிக்கை அவசியம்
இந்த சந்திப்பு கடந்த மார்ச் 15ம் தேதி நடைபெற்றது. அப்போது தனது சாக்ஸியையும் சர்ப்ராசுதீன் உடன் அழைத்து சென்றிருந்தார். அங்குள்ள கேன்டீனில் அமர்ந்து அவர்கள் அனைவரும் பேசி கொண்டிருந்தனர்.
காரை விற்பது போல் விற்று திருடிய இன்ஜினியர்.. செகண்ட் ஹேண்டு வாகனம் வாங்கும்போது எச்சரிக்கை அவசியம்
அப்போது மனோஜ் சிங்கால் பணம் அதிகமாக வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அவர்களுக்குள் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் மனோஜ் சிங்கால் அங்கிருந்து கிளம்பி சென்று விட்டார்.
காரை விற்பது போல் விற்று திருடிய இன்ஜினியர்.. செகண்ட் ஹேண்டு வாகனம் வாங்கும்போது எச்சரிக்கை அவசியம்
சிறிது நேரம் கழித்து சர்ப்ராசுதீன், சாக்ஸி ஆகியோரும் வெளியே வந்துள்ளனர். ஆனால் மனோஜ் சிங்காலிடம் வாங்கி பயன்படுத்தி வந்த ஆடி ஏ6 செடான் காரை காணவில்லை. இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
காரை விற்பது போல் விற்று திருடிய இன்ஜினியர்.. செகண்ட் ஹேண்டு வாகனம் வாங்கும்போது எச்சரிக்கை அவசியம்
இதுகுறித்து டெல்லியில் உள்ள ஹஜ்ரத் நிஜாமுதீன் போலீஸ் ஸ்டேஷனில், சர்ப்ராசுதீன் புகார் அளித்தார். போலீசாரும் உடனடியாக விசாரணையை தொடங்கினர். இதில், சர்ப்ராசுதீனிடம் காரை வழங்கும்போது, அதற்கான டூப்ளிகேட் சாவியை மனோஜ் சிங்கால் ஒப்படைக்கவில்லை என்ற தகவல் தெரியவந்தது.
காரை விற்பது போல் விற்று திருடிய இன்ஜினியர்.. செகண்ட் ஹேண்டு வாகனம் வாங்கும்போது எச்சரிக்கை அவசியம்
இதனை அடிப்படையாக வைத்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். இதில், தன்னிடம் இருந்த டூப்ளிகேட் சாவியை பயன்படுத்தி, மனோஜ் சிங்கால்தான் காரை திருடி சென்று விட்டார் என்பது கண்டறியப்பட்டது. இதனால் மனோஜ் சிங்கால் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.
காரை விற்பது போல் விற்று திருடிய இன்ஜினியர்.. செகண்ட் ஹேண்டு வாகனம் வாங்கும்போது எச்சரிக்கை அவசியம்
ஆனால் மனோஜ் சிங்கால் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. இதனால் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளி வரமுடியாத பிடியாணையை நீதிமன்றம் பிறப்பித்தது. தொடர்ந்து அவரை தேடி வந்த போலீசார், உத்தரகாண்டில் உள்ள காஸிபூர் பகுதியில் வைத்து மனோஜ் சிங்காலை கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்தனர்.
காரை விற்பது போல் விற்று திருடிய இன்ஜினியர்.. செகண்ட் ஹேண்டு வாகனம் வாங்கும்போது எச்சரிக்கை அவசியம்
மனோஜ் சிங்கால் திருடி சென்ற கார், டெல்லி கரோல் பாக் பிடான்பூர் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது. அதனை போலீசார் மீட்டனர். கார் நிறுத்தப்பட்டிருந்த பிடான்பூரில்தான், மனோஜ் சிங்கால் மொபைல் கடை வைத்துள்ளார். பி.டெக்., முடித்துள்ள அவர் தற்போது எம்.டெக்., படித்து வருகிறார்.
காரை விற்பது போல் விற்று திருடிய இன்ஜினியர்.. செகண்ட் ஹேண்டு வாகனம் வாங்கும்போது எச்சரிக்கை அவசியம்
இதனிடையே கார் மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்களை, செகண்ட் ஹேண்டில் வாங்கும்போது,மோசடி செய்யப்பட்ட சம்பவங்கள் பல அரங்கேறியுள்ளன. மனோஜ் சிங்கால் கைது செய்யப்பட்ட விவகாரம், செகண்ட் ஹேண்டில் கார், பைக் வாங்கும்போது, கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதை எடுத்துரைக்கிறது. இது போன்ற மோசடிகளில் இருந்து எப்படி தப்பிக்கலாம்? என்பதை இனி பார்க்கலாம்.
காரை விற்பது போல் விற்று திருடிய இன்ஜினியர்.. செகண்ட் ஹேண்டு வாகனம் வாங்கும்போது எச்சரிக்கை அவசியம்
வாகனத்தை வாங்கிய உடன், முடிந்த வரை வேகமாக, அதனை உங்கள் பெயருக்கு மாற்றி கொள்ளுங்கள். அதேபோல் டூப்ளிகேட் சாவியையும் மறக்காமல் கேட்டு வாங்கி கொள்ளுங்கள். டூப்ளிகேட் சாவி தொலைந்து போய் விட்டது, திருடு போய் விட்டது என கூறினாலும், உஷாராக இருப்பது அவசியம்.
காரை விற்பது போல் விற்று திருடிய இன்ஜினியர்.. செகண்ட் ஹேண்டு வாகனம் வாங்கும்போது எச்சரிக்கை அவசியம்
ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் வைத்து, பண பரிமாற்றத்தை செய்ய வேண்டாம். பணத்தை ஒப்படைக்க, மக்கள் நடமாட்டம் நிறைந்த பொதுவான இடங்களே சிறந்தது. பணம் செலுத்தியதற்காக வழங்கப்பட்ட ரசீதுகளையும் தொலைக்காமல் வைத்து கொள்ளவும்.
காரை விற்பது போல் விற்று திருடிய இன்ஜினியர்.. செகண்ட் ஹேண்டு வாகனம் வாங்கும்போது எச்சரிக்கை அவசியம்
பார்ப்பதற்கு உண்மையானது என தோன்றினாலும், ஒப்பந்தங்களை ஒரு முறைக்கு இரு முறை நன்றாக படித்து கொள்ளுங்கள். ஏனெனில் அது மோசடியானதாக கூட இருக்கலாம்.
Social share:

G+1

0 Response to "ஒரு வாகனம் வாங்கும்போது எச்சரிக்கை அவசியம்- முழுமையாக படிக்கவும்"

Message plus récent Messages plus anciens Accueil

Tips

வாஸ்துப்படி வீட்டுல இந்த இடத்துல கடிகாரத்தை வைத்தால் , வீட்டில் செல்வம் குவியும்!

ஒரு வீட்டில் நாம் பிரச்சனையின்றி சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதில் வாஸ்து முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே தான் குடிப்புகும் முன், அந...

loading...