குடல்வால் இருப்பதற்கான அறிகுறிகள் இதுதான்... என்னென்ன பரிசோதனைகள் செய்யணும்?!!

appendicitis signsஉங்கள் தொப்புள் பகுதியில் தீவிர வலியை என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா?தொடர்ச்சியான வாந்தி ஏற்படுகிறதா? சரியாக சாப்பிட முடியாமல் அவதிப்படுகிறீர்களா இது போன்ற பிரச்சினைகள் இருந்தால் உங்களுக்கு குடல் வால் அழற்சி ஏற்பட்டுள்ளது.
இந்த குடல் வால் அழற்சி சிறியவர்கள் பெரியவர்கள் வரை யாரை வேண்டுமென்றாலும் பாதிக்கலாம்.


குடல் வால் அழற்சி (அப்பன்டீஸ்)

குடல் வால் அழற்சி (அப்பன்டீஸ்)சிறுகுடலும் பெருங்குடலும் சந்திக்கின்ற பகுதியில் வால் போன்ற பகுதி இருக்கும். இது தான் குடல் வால் என்று அழைக்கப்படுகிறது. இந்த வால் பகுதியில் ஏற்படும் அழற்சியை தான் குடல் வால் அழற்சி என்று கூறுகின்றனர். இந்த வால் பகுதி அப்படியே அழற்சியால் தீவிரமாக பாதிக்கப்பட்டு பிறகு அங்கே வீக்கத்தை உண்டாக்கி அடைப்பை ஏற்படுத்தி விடும். இதனால் அங்கே இரத்தம் ஓடுவது தடைபட்டு விடும். அப்படியே படிப்படியாக பாதிப்படைந்து வீக்கம் வைத்து சீழ் அடைந்து விடும்.
அமெரிக்க தேசிய மருத்துவ நிறுவனங்கள் கருத்துப்படி குடல்வால் அழற்சி முக்கிய பிரச்சனைகளுள் ஒன்றாகும். இதனால் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்படுகிறது. 10 பேர்களில் 1 நபர்கள் இந்த பிரச்சினையை சந்தித்து வருகின்றன என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது எந்த வயதினரையும் தாக்கும் பிரச்சினையாக இருந்தாலும் குறிப்பாக 10-30 வயதுடைய இளைஞர்களை அதிகளவில் தாக்குகிறது.

காரணங்கள்காரணங்கள்

குடல் வால் அழற்சி ஏற்பட சரியான காரணங்கள் இதுவரை தெரியவில்லை. இது பொதுவாக தனித்துவமான சில பொருட்களால் குடல் வால் தடைபடுகிறது. பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ் மற்றும் பாராசைட்ஸ் போன்ற கிருமிகள் குடல் வாலில் அழற்சியை ஏற்படுத்தி அங்குள்ள திசுக்களை வீக்கமடையச் செய்து குடல் வால் அழற்சியை ஏற்படுத்துகின்றன. இதனால் குடல் வால் பகுதியே சேதமடைய ஆரம்பித்து விடும்.

அறிகுறிகள்அறிகுறிகள்

குடல் வால் அழற்சி ஏற்பட்ட 4-48 மணி நேரத்திற்குள் அதன் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்து விடும்.முந்தைய அறிகுறிகளாக
தொப்புள் மற்றும் அடிவயிற்று பகுதியில் தீவிர வலி
இதர அறிகுறிகள்
குமட்டல் மற்றும் வாந்தி
பசியின்மை
லேசான காய்ச்சல்
வயிறு வீக்கம், வயிறு உப்புசம்
மலச்சிக்கல்
வயிற்றுப் போக்கு
வலியுடன் இருமல்
போன்றவை ஏற்படும்.
இந்த அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் வேறுபடலாம். உங்களுக்கு குடல் வால் அழற்சி இருப்பதாக நினைத்தால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் இதை தாமதம் செய்தால் அந்த சிவந்த வால் பகுதி வெடித்து உயிருக்கே ஆபத்தாகி விடும் என்று மருத்துவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

எப்பொழுது மருத்துவரை அணுக வேண்டும்?எப்பொழுது மருத்துவரை அணுக வேண்டும்?

காய்ச்சல் அல்லது குமட்டல் அல்லது அடிவயிற்றில் வலி ஏற்பட்டால் உடனே மருத்துவரை சந்தியுங்கள். 4 மணி நேரத்திற்கு மேல் இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனே தாமதிக்காமல் மருத்துவரிடம் சென்று விடுங்கள். குடல் வால் அழற்சி யின் அறிகுறிகளை கண்டறிவது மிகவும் சிரமம். ஏனெனில் இது மற்ற பாதிப்பின் அறிகுறிகளைப் போலவே இருக்கும். மலச்சிக்கல், குடல் பிரச்சினை, சிறுநீர் தொற்று, எரிச்சலுடன் மலம் கழித்தல் போன்ற அறிகுறிகள் மாதிரியே இருக்கும்.

பரிசோதனைகள்பரிசோதனைகள்

எனவே இதை கண்டறிய மருத்துவர்கள் நிறைய பரிசோதனை களை மேற்கொள்வார்கள். மருத்துவர்கள் வயிற்றில் கையை வைத்து அமுக்கி பார்த்து குடல் தசைகளின் இயல்பை கணித்தல்

இரத்த பரிசோதனைஇரத்த பரிசோதனை

இரத்த பரிசோதனை மூலம் இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை பார்த்து அழற்சியை கண்டறிவர்.
சிறுநீர் பரிசோதனை
சிறுநீர் பரிசோதனை மூலம் எதாவது சிறுநீர் கற்கள், சிறுநீர் தொற்று உள்ளதா போன்றவற்றை பார்ப்பார்கள்
எக்ஸ்ரே
எக்ஸ்ரே மூலம் அடிவயிற்று பகுதியை படம் எடுத்து பார்த்தல்.
CT ஸ்கேன்
CT ஸ்கேன் அடிவயிற்று பகுதியில் ஏற்படும் வலியை கண்டறிய உதவுகிறது.
இடுப்பு அழற்சி தொற்று
இடுப்புப் பகுதியை பரிசோதனை செய்வதன் மூலம் எதாவது இடுப்பு அழற்சி நோய் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிவர்.

கருக்குழாய் கர்ப்பம்கருக்குழாய் கர்ப்பம்

கர்ப்ப பரிசோதனை மூலம் எதாவது கருக்குழாயில் கர்ப்பம் தரிப்பு ஏற்பட்டுள்ளதா போன்றவற்றை பரிசோதனை செய்து முடிவுக்கு வருவர்.
24 மணி நேரம் உங்களுக்கு ஏற்பட்டுள்ள அறிகுறிகளை மருத்துவர் கவனிப்பார். அறிகுறிகள் மாறியுள்ளதா அல்லது குறைவு அல்லது அதிகமாகி உள்ளதா என்பதை கண்காணிப்பார்கள்.சிகிச்சைசிகிச்சை

உங்களுக்கு குடல் வால் அழற்சி இருந்தால் அதை அறுவை சிகிச்சை செய்து ரிமூவ் செய்ய மருத்துவர் பரிந்துரைப்பார். இந்த அறுவை சிகிச்சைக்கு பெயர்

அப்பன்டெக்டோமி

அப்பன்டெக்டோமி
இது குடல் வால் சிதைவடைவதை தடுக்கிறது. இதை எளிதாக லேப்ரோஸ்கோபி முறை மூலமே செய்து விடலாம். வலி குறைந்த இந்த சிகச்சை சீக்கிரமாகவும் குணமடைந்து விடும். அறுவை சிகிச்சைக்கு முன் அழற்சியை தடுக்க ஆன்டி பயோடிக் எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. எனவே அறுவை சிகிச்சை நேரத்தில் எதுவும் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது. குடல் வாலில் சீழ் எதாவது ஏற்பட்டு இருந்தால் நன்றாக துடைத்து விட்டு அறுவை சிகிச்சை செய்யப்படும். அப்பன்டெக்டோமி செய்த பிறகு 2-6 வாரங்கள் ஆகும் நம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப. இந்த நேரங்களில் உடம்பை அதிகமாக அசைக்க கூடாது. மருத்துவரை அணுகி அடிக்கடி செக்கப் செய்து கொள்ள வேண்டும்.


ஆன்டி பயோடிக்ஆன்டி பயோடிக்

குடல் வால் சிதைவடையாத சமயத்தில் வெறும் சீழை மட்டும் நீக்க ஆன்டி பயாடிக் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகிறது. அறுவை சிகிச்சையை ஒப்பிடும் போது இதற்கு குறைவான பணம் மட்டுமே தேவைப்படுகிறது. ஆனால் ஆன்டி பயோடிக் மட்டும் இந்த குடல் வால் அழற்சியை போக்க போதும் என்பதற்கு எந்த அறிவியல் சான்றும் இல்லை. இந்த ஆன்டி பயோடிக் மட்டும் உள்ள சிகச்சை திரும்பவும் குடல் வால் அழற்சி ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே இதற்கு அறுவை சிகிச்சை தான் சிறந்தது என்கின்றனர் டாக்டர்கள்.

எது சரியான முறைஎது சரியான முறை

பொதுவாக குடல் வால் அழற்சிக்கு அப்பன்டெக்டோமி தான் மேற்கொள்ளப்படுகிறது. அழற்சி அடைந்த குடல் வாலை நீக்குவது தான் சிறந்தது. சேதமடைய போகும் குடல் வாலை நீக்குவதால் நம் குடலின் இயக்கத்தில் எந்த மாறுபாடும் ஏற்படாது. ஆனால் நீங்கள் குடல் அழற்சியை அப்படியே வைத்து இருந்தால் ஏராளமான பாதிப்புகளை சந்திக்க நேரிடும். மற்றொரு பயன் இந்த அறுவை சிகிச்சை செய்த பிறகு மறுபடியும் குடல் வால் அழற்சி ஏற்படும் அபாயம் கிடையாது. எனவே உங்கள் மருத்துவரின் ஆலோசனை பேரில் இதை செய்து கொள்ளுங்கள்.
உணவு முறை


உணவு முறை

குடல் வால் அழற்சியை தடுக்க சில உணவு முறைகளையும் கையாளுங்கள். அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஓட்ஸ், கோதுமை, பழுப்பு அரிசி, பீன்ஸ், பழங்கள் போன்றவற்றை சேருங்கள். மேற்கண்ட அறிகுறிகளை அலட்சியமாக விட்டு விடாதீர்கள். உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்று கொள்வது நல்லது.

                                                                                               நன்றி: தமிழ் போல்ட் ஸ்கை
Social share:

G+1

0 Response to "குடல்வால் இருப்பதற்கான அறிகுறிகள் இதுதான்... என்னென்ன பரிசோதனைகள் செய்யணும்?!!"

Messages plus anciens Accueil

Tips

வாஸ்துப்படி வீட்டுல இந்த இடத்துல கடிகாரத்தை வைத்தால் , வீட்டில் செல்வம் குவியும்!

ஒரு வீட்டில் நாம் பிரச்சனையின்றி சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதில் வாஸ்து முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே தான் குடிப்புகும் முன், அந...

loading...